பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வெங்கடுக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் வெங்கட் ரங்கநாதன். இவர் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா இவர் காலங்கள்’ என்ற சீரியல் மூலம் தான் நடிகர் ஆனார். அதனை தொடர்ந்து இவர் புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார்.

இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ரோஜா சீரியல் தான். இது தவிர இவர் பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருந்தார். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு முடிவடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் ஜீவா என்ற ரோலில் நடித்து இருந்தார். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது.
வெங்கட் குறித்த தகவல் :
இந்த சீரியலில் மீனா- ஜீவா உடைய காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தொடர் ஒளிபரப்பாகி தற்போது சீரியலில் குமார், அரசி காதலித்தார்கள் என்றவுடன் பாண்டியன் அவசர அவசரமாக தன்னுடைய அக்கா மகன் சதீஷை திருமண செய்து வைக்க ஏற்பாடு செய்தார். அரசி தான் செய்து தவறை உணர்ந்து திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் வீட்டில் உள்ளவர்கள் கோயிலில் பொங்கல் வைக்க சென்றிருக்கிறார்கள். அங்கு அரசியை கடத்தி செல்ல குமார் திட்டம் போடுகிறார். ஒரு வழியாக அந்த பிரச்சனையில் இருந்து பாண்டியன் குடும்பம் தப்பித்து விடுகிறது. இன்னொரு பக்கம் அரசி நடன போட்டியில் கலந்து இருப்பதால் இறுதி கட்டத்திற்கு வந்து வருகிறார். அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.
View this post on InstagramA post shared by Venkatesh Renganathan (@venkat_renganathan)
வெங்கட் - அஜந்தா ஜோடி:
சமீபத்தில் தான் இந்த சீரியலில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த வசந்த் விலகி வெங்கட் நடித்து வருகிறார். மீண்டும் செந்தில்- மீனா ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இதனிடையே இவர் அஜந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் தன் மகளுடன் இணைந்து விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து இருந்தார்.
https://www.youtube.com/watch?v=7kyo4XPIfdQ
வெங்கடுக்கு பிறந்த குழந்தை:
இப்படி இருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வெங்கட்டுக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இன்று வெங்கட் - அஜந்தா ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தற்போது இந்த தகவலை வெங்கட் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






