கர்ப்பமாக இருக்கவங்களா நடிக்கிறாங்க, ஆனால், முகப்பரு இருக்கும் என்னை இப்படி சொல்றாங்க – ஐஸ்வர்யா வருத்தம்.

0
6244
Deepika

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ஐஸ்வ்ர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபிகா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சாய் காயத்ரி நடித்து வருகிறார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், எனக்கு முகப்பரு பிரச்சனை இருந்ததால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தேன். கடந்த ஜூன் மாதம் முதலே எனக்கு முகப்பரு அதிகமாக துவங்கியது. மேக்கப் போட்டதால் தான் என்னுடைய முகப்பருக்கள் அதிகமானது. எனக்கு இந்த பிரச்சினை இருப்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் மேலும், இதை சரி செய்ய எனக்கு நேரமும் கொடுத்தார்கள்.

This image has an empty alt attribute; its file name is image-53.png

ஆனால், கடந்த மூன்று மாதங்களாக ஆகியும் எனக்கு இந்த பிரச்சனை தீரவில்லை. இருந்தாலும் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று சொன்னார்கள். ஆனால், மேக்கப் போட போட இன்னும் அதிகமாகத்தான் வந்தது. பொதுவாக ஒரு மாதத்தில் பொதுவாக எங்கள் ஷூட்டிங் முடிந்து கொஞ்சம் பிரேக் கிடைக்கும்.

இதையும் பாருங்க : சந்திரமுகி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சொர்ணமா இது ? என்ன ஒரு மாடர்ன் அவதாரம்.

- Advertisement -

அதன் பின்னர் எப்போது ஷூட்டிங் ஆரம்பிக்கிறதோ எங்களுக்கு அழைப்பு வரும். ஆனால், இந்த முறை அப்படி எதுவும் அழைப்புகள் வரவில்லை. அதனால் எனக்கு சந்தேகம் இருந்தது. அதன் பின்னர்தான் மேனேஜர் கால் செய்து நான் நீக்கப்பட்டதை அறிவித்து இருந்தார். முன்பைவிட சீரியல்களில் நிறைய விஷயங்கள் மாறி இருக்கிறது கருப்பாக இருக்கும் ஹீரோயின்கள், ஜீரோ சைஸ் இல்லாத ஹீரோயின்கள், ஏன் மாசமாக இருக்கும் போது கூட சிலர் நடிக்கிறார்கள். ஆனால், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே ஏன் முகம் எப்படி இருக்கு என்றெல்லாம் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

deepika

முதலில் ரசிகர்கள் பார்வை மாறாத வரை மீடியா உடைய பார்வையும் மாறாது. எனக்கும் சேனலுக்கும் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் கிடையாது. நான் நன்றாக நடக்க வில்லையா இல்லை ? படக் குழுவில் ஏதாவது பிரச்சினை செய்தேனா? அப்படி ஏதாவது செய்து என்னை வெளியேற்று இருந்தால் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். ஆனால், முகப்பரு இருப்பது என்னுடைய தவறு இல்லையே முகம் என்றால் முகப்பரு வரும்தானே ? அதனால் நான் சேனலையும் தவறு சொல்லமாட்டேன் அவர்களும் எனக்கு இதை சரி செய்ய நேரம் கொடுத்தார்கள். ஆனால். அவர்கள் கொடுத்த நேரத்திற்குள் என்னால் இதை சரி செய்ய முடியவில்லை என்பதால்தான் சீரியல் இருந்து விலக வேண்டியதாக ஆகிவிட்டது என்று வருத்தமுடன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement