சூரி இல்ல திருமணத்தில் திருடிய டிப் டாப் திருடன் இவர் தான் – CCTVயால் சிக்கிய கீரிப் புள்ள.

0
1358
soori
- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற சூரி வீட்டின் இல்லத் திருமண விழாவில் நகை திருடிய நபரை போலீசார் கைது செய்து உள்ளனர். சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகரான சூரி ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

-விளம்பரம்-

தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சூரியின் அண்ணன் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சூரியின் குடும்பம் கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையாக இருந்து வருவதால், வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் நடிகர் சூரி முன் நின்று நடத்தி வருகிறார்.

இதையும் பாருங்க : அங்க ஷூட்டிங் இல்ல, திரும்பி வந்துடுங்க – பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்.

- Advertisement -

அதேபோலவே அண்ணன் மகள் திருமணத்துக்கான மொத்த ஏற்பாட்டையுமே சூரிதான் கவனித்தி இருந்தார். சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் உள்ள திருமணமண்டபத்தில் நடந்தது. அப்போது திருமணத்திற்கு. வந்த மர்ம நபர் ஒருவர் மணமகள் அறையில்புகுந்து ஒன்பதரை பவுன் நகைகளை திருடி சென்றுள்ளான்.

இந்த திருட்டு தொடர்பாக கீரைத்துரை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம ஆசாமியை தேடி வந்த நிலையில் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் CCTV கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞனை கைது செய்தனர். விசாரணையில் இதுபோன்று பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் டிப் டாப் உடையணிந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

-விளம்பரம்-
Advertisement