லவ் பண்ணது ஒரு பொண்ணு, கல்யாணம் பண்ணது ஒரு பொண்ணு, இப்போ வாழ போறது வேற பொண்ணு – புதிய ஐஸ்வர்யாவை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள்.

0
3501
Pandian
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா அறிவுமணி, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.இந்த சீரியலில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர்.

இதையும் பாருங்க : கணவர் செய்த கொடுமை, ஓராண்டில் விவாகரத்து – தற்போது சீரியலில் நடித்து வரும் மின்சார கண்ணா பட நடிகை.

- Advertisement -

இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள். ஆனால், கடைக்குட்டி இருந்து வரும் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந்தது. பின் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் கண்ணனின் காதலியாக நடித்து வந்தார் வைஷாலி. பின்னர் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக Vj தீபிகா கமிட் ஆனார்.

கடந்த சில வாரமாக கண்ணன் – ஐஸ்வர்யாவை வைத்து தான் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் இருந்து தீபிகா வெளியேறி இருக்கிறார். அவருக்கு பதிலாக இன்று முதல் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த சாய் காயத்ரி நடிக்க இருக்கிறார். ஆனால், கண்ணன் கதாபாத்திரத்திற்கு சாய் காயத்ரி நிச்சயம் செட் ஆக மாட்டார். அவர் கண்ணனுக்கு அக்கா போல இருப்பார் என்று ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement