பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘முல்லை’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்ரா. சித்ரா அவர்கள் முதன் முதலில் விஜேவாக தான் தன் பயணத்தை தொடங்கினார். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் முதன் முதலாக மக்கள் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இது ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல்.
இந்நிலையில் நடிகை சித்ரா அவர்கள் சமூக வலைத்தளங்களில் போலி கணக்கு இருந்தால் புகார் அளியுங்கள் என்று பதிவிட்டுள்ளார். சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் நடிகர்கள், நடிகைகள் பெயர்களில் போலி கணக்கு எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் நடிகை சித்ரா அவர்கள் ட்விட்டரில் நிறைய போலி கணக்குகள் வந்து கொண்டிருக்கின்றன.
இது குறித்து ஏதேனும் தகவல் அறிந்தால் புகார் அளியுங்கள் என்று சித்ரா கூறியுள்ளார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை சித்ரா அவர்கள் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் தற்போது வெள்ளித்திரையிலும் கலக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.