நீங்க சித்ரா மாதிரி இருக்கீங்கன்னு சொல்றது எனக்கு புடிக்கல – யார் இவங்க ? இவங்க தான் அடுத்த முல்லையா ? விவரம் இதோ.

0
1874
- Advertisement -

விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வந்தனர். இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா. இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி ஹோட்டலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

-விளம்பரம்-

சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது கணவர் ஹேம்நாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ரா இறந்துவிட்டதால் பாண்டியன் ஸ்டோர்ஸில் அவர் நடித்து வந்த முல்லை கதாபாத்திரத்தில் இனி யார் நடிப்பார் என்ற மிகப்பெரிய கேள்வி நிலவி வருகிறது. சமீபத்தில் கூட சரண்யா, முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்து சரண்யா தனது சமூக வலைதளத்தில் விளக்கமளித்தும் இருந்தார்.

இதையும் பாருங்க : வனிதாவை திட்டி தீர்த்த சித்ராவின் ரசிகர்கள் – பதிவை நீக்கியதோடு திட்டமிட்டதை நிறுத்திய வனிதா.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு பதிலாக, பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸில் கட்டிய அதே போன்ற புடவைகளை கட்டிக்கொண்டு பெண் ஒருவர் நடத்திய போட்டோ ஷூட் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நீங்கள் தான் அடுத்த சித்ராவா என்று கேட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் அந்த போட்டோ ஷூட்டை நடத்திய கீர்த்தனா என்பவர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில், இத்தனை ஆண்டுகள் நான் எங்கு சென்றாலும் எனக்கு வரும் முதல் கமெண்ட், நீங்கள் சித்ரா போல இருக்கிறீர்கள். முல்லை போல இருக்கிறீர்கள். சின்ன பாப்பா பெரிய பாப்பா நடிகை என்று பலவிதமான கமெண்டுகளை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், அதையே கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. காரணம், எனக்கு வேறு ஒருவரின் அடையாளம் வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், தற்போது அதே கமெண்டை கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு சிலரை என்னால் மகிழ்ச்சியாக வைக்க முடிகிறது.

இதையும் பாருங்க : உள்ளாடை தெரியும் அளவு மெல்லிய உடையில் போட்டோ ஷூட் – கிளாமரின் எல்லையில் ஜூலி.

-விளம்பரம்-

அவர்கள் இறந்த பின்னர் எனக்கு நண்பர்கள் இடமிருந்தும் தெரிந்த வட்டாரத்தில் இருந்து தொடர்ந்து மெசேஜ் வந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் அனைவரும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவை தொடர்புகொண்டு ஒருஆடிஷனை குடு அவர்கள் நிச்சயம் உன்னை தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறிக்கொண்டு இருந்தார்கள். ஆரம்பத்தில் இதைக் கேட்கும்போது எனக்கு என்னை வைத்து காமெடி செய்கிறார்கள் என்றுதான் தோன்றியது. ஆனால், தற்போதும் அதேபோல மெசேஜ்கள் எனக்கு வருகிறது.

முல்லை அல்லது சித்துவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இந்த நேரத்தில் அவர்கள் முல்லைக்கு பதிலாக யார் நடிக்கிறார்கள் என்பதை முடிவு செய்து இருப்பார்கள். இந்த போட்டோ ஷூட் நடத்தியதற்கு காரணம் நாங்கள் சித்து மீது வைத்துள்ள அன்பும் மரியாதையும் காட்டத்தான். எங்களைப்போல அவரை நேசிக்கும் அனைவரும் இந்த புகைப்படங்களை பார்த்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement