கல்யாணம் முதல் காதுகுத்து வரை ஒரே இடம் – விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.

0
2080
chitra
- Advertisement -

விஜய் டிவி என்றாலே அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு பல நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர். நிச்சயதார்த்தம் வரை கல்யாண கொண்டாட்டம் வரை பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் சித்ராவிற்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருக்கிறது விஜய் டிவி. தொகுப்பாளினியும் நடிகையுமான சித்ராவிற்கு தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது நாம் அனைவரும் அறிந்ததே. விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிகளை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CGjwaIHMMcS/?igshid=71xkg9i017sd

இந்த தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான் இதில் முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

- Advertisement -

தற்போது இவருக்கென்று தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.சித்ராவிற்கு எப்போது திருமணம் என்று அவரது ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர். இந்த நிலையில் நடிகை சித்ராவிற்கு திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கடந்த மாதம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள GPN பேலஸில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. அடிக்கடி இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை கூட பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் வரும் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக கிராமத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. அதில் சித்ராவும் கலந்துகொண்டுள்ளார். மேலும் சித்ரா மற்றும் அவரது வருங்கால கணவர் இருவருக்கும் நலங்கு நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியுள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள் கல்யாணம் முதல் காது குத்து வரை அனைவத்திற்கும் விஜய் டிவியை அணுகுங்கள் என்று கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement