சித்ரா இறந்து இன்றோடு இத்தனை நாள் ஆகிடுச்சா ? அவரது குடும்பத்தனர் செய்துள்ள விஷயம்.

0
1727
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்து சிபிஐ விசாரணை வரை சென்றுள்ளது.

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசம் மற்றும் ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். தற்போது இந்த சீரியல் தான் விஜய் டிவியில் நம்பர் 1.அதோடு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இதில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் பல்வேறு நபர்கள் நடித்தாலும் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் வரும் குமரன் மற்றும் சித்ரா தான் ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஜோடிகளாக இருந்து வந்தார்கள். இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார்.

ஆனால், அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இப்படி ஒரு நிலையில் சித்ரா இறந்து இன்றோடு இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அவரது குடும்பத்தினர் சித்ராவின் உருவப் படத்தை வைத்து வழிபட்டு இரங்கலை தெரிவித்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement