அனுமதி கொடுத்ததும் படப்பிடிப்புகளை துவங்க முடியாமல் இருக்கும் சின்னத்திரை – காரணம் இது தான்.

0
3870
Vj-Chitra
- Advertisement -

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் அனைத்து விதமான படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும்.பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. படப்பிடிப்பு நடத்தப்படும் இடத்தில் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

-விளம்பரம்-
rw

படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு பிறகு தவறாமல் மாஸ்க் அணியவேண்டும். படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அடிக்கடி சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். படப்பிடிப்பு இடத்தில் 20 நபர்களுக்கு மேல் இருக்க கூடாது. சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சிஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதையும் பாருங்க : எஸ் ஏ சி ஆபீசுக்கு `எங்க டைட்டிலை ஏன் சார் பயன்படுத்தறீங்க’னு கேட்டோம். அதுக்கப்புறம் எனக்கு பட வாய்ப்புகளே வரல – இளைய தளபதி சரவணன்.

- Advertisement -

அனுமதி அளிக்கப்பட்டும்இந்த கட்டுப்பாடுகளால் இன்னும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. இதுகுறித்து பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சித்ரா கூறியுள்ளதாவது, எனக்கு இந்த வாரம் ஷூட்டிங் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். ஆனால், 20 பேர் தான் படப்பிடிப்பு அனுமதிக்கபடுவார்கள் என்றால் 2, 3 முக்கிய ஆர்டிஸ்டுகள் தான் நடிக்க முடியும். அதே போல பொருளாதார ரீதியில் ஆர்ட்டிஸ்ட்டுகள் இந்த லாக்டவுனை சமாளித்துவிடுவார்கள்.

Pandiyan-Stores-Chitra

ஆனால், கேமராவுக்கு பின்னால் இருக்கும் ஊழியர்கள் பல பேர் வேலை இழந்து கஷ்டப்படுவார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார் சித்ரா. எனவே, 30, 40 பேரையாவது படபிடிப்பு அனுமதித்தால் தான் சீரியல் படப்பிடிப்புகள் முழுமையாக துவங்க ஏதுவாக இருக்கும் என்கிறார்கள் சீரியல் வட்டாரத்தினர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement