முகப்பரு எல்லாம் பிரச்சனையா, வாங்க எங்க சீரியலுக்கு – தீபிகாவிற்கு சீரியல் வாய்ப்பு கொடுத்துள்ள தொலைக்காட்சி. எந்த தொடரில் தெரியுமா ?

0
626
deepika
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா அறிவுமணி, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-53.png

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.இந்த சீரியலில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ்சில் தீபிகா :

கமுல்லை கதிரை போலவே ஜீவா – மீனா, கண்ணன் – ஐஸ்வர்யா ஜோடிக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இதில் கண்ணனுமு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபிகா, சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய தீபிகா, கடந்த ஜூன் மாதம் முதலே எனக்கு முகப்பரு அதிகமாக துவங்கியது. மேக்கப் போட்டதால் தான் என்னுடைய முகப்பருக்கள் அதிகமானது. எனக்கு இந்த பிரச்சினை இருப்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் மேலும், இதை சரி செய்ய எனக்கு நேரமும் கொடுத்தார்கள்.

முகப்பருவால் பறிபோன வாய்ப்பு :

முன்பைவிட சீரியல்களில் நிறைய விஷயங்கள் மாறி இருக்கிறது கருப்பாக இருக்கும் ஹீரோயின்கள், ஜீரோ சைஸ் இல்லாத ஹீரோயின்கள், ஏன் மாசமாக இருக்கும் போது கூட சிலர் நடிக்கிறார்கள். ஆனால், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே ஏன் முகம் எப்படி இருக்கு என்றெல்லாம் கமெண்ட் செய்திருக்கிறார்கள். முதலில் ரசிகர்கள் பார்வை மாறாத வரை மீடியா உடைய பார்வையும் மாறாது. எனக்கும் சேனலுக்கும் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் கிடையாது.

-விளம்பரம்-

தீபிகாவின் வருத்தம் :

நான் நன்றாக நடக்க வில்லையா இல்லை ? படக் குழுவில் ஏதாவது பிரச்சினை செய்தேனா? அப்படி ஏதாவது செய்து என்னை வெளியேற்று இருந்தால் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். ஆனால், முகப்பரு இருப்பது என்னுடைய தவறு இல்லையே முகம் என்றால் முகப்பரு வரும்தானே ? அதனால் நான் சேனலையும் தவறு சொல்லமாட்டேன் அவர்களும் எனக்கு இதை சரி செய்ய நேரம் கொடுத்தார்கள். ஆனால். அவர்கள் கொடுத்த நேரத்திற்குள் என்னால் இதை சரி செய்ய முடியவில்லை என்பதால்தான் சீரியல் இருந்து விலக வேண்டியதாக ஆகிவிட்டது என்று வருத்தமுடன் கூறியுள்ளார்.

புதிய சீரியலில் தீபிகா :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய பின்னர் இவர் வேறு எந்த தொடரிலும் நடிக்கவில்லை. மேலும், தனது முகப்பருக்களை சரி செய்ய சிகிச்சையும் எடுத்து வருகிறார். மேலும், யூடுயூபில் மட்டும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் அவர் கலர்ஸ் தமிழில் சில்லுனு ஒரு காதல் தொடரில் புதியதாக நடிக்க தொடங்கியுள்ளார். அதற்கான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement