‘சித்ராவின் பிறந்தநாள் இன்று’ – சீரியலுக்காக அவர் எடுத்த முதல் புகைபடத்தை பதிவிட்டு இயக்குனர் உருக்கமான வரிகள்.

0
254
chitra
- Advertisement -

மறைந்த சித்ரா குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் முதன் முதலாக மக்கள் டிவியில் தொகுப்பாளினி தான் மீடியாவுக்குள் நுழைந்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை மனதை பாதித்த ஒன்று.

- Advertisement -

சித்ரா தற்கொலை:

இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார்.

சித்ரா வழக்கு:

அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று அவர் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்தார்கள். அதன் பெயரில் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சித்ரா இறந்தும் ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? என்று இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது.

-விளம்பரம்-

இயக்குனர் சிவா சேகர் பதிவு:

இன்றும் இவருடைய தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று தான் வருகிறது. இந்நிலையில் இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் பிறந்தநாள் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இயக்குனர் சிவா சேகர் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்காக சித்ரா எடுத்த முதல் புகைப்படத்தை பதிவிட்டு , இன்று முல்லையின் பிறந்த நாள். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லை கதாபாத்திரத்தின் பிறந்தநாள் இன்று. ஒரு கதையில் வரும் கதாபாத்திரத்தின் பிறந்த நாளை இவ்வளவு சிறப்பாக கொண்டாடுவது திரை உலகில் புதுமை.

முல்லை சித்து குறித்த பதிவு:

கதையில் முல்லையாக வாழ்ந்து சிறப்பாக உருவம் கொடுத்த சித்துவுக்கு பெருமை. ரசிகர்களின் ரசனை மிகவும் அருமை. எனது தொடருக்காக சித்துவை முல்லையாக மாற்றிய தருணம். 2018 ஜூன் மாதத்தில் ஒரு நாள். அன்றைய தினம் முல்லைக்கு திருமணத்துக்கு முன்பு, திருமணத்துக்கு பின்பு என இரு விதமாக ஒப்பனை செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை முல்லையின் நினைவுகளோடு தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சித்து எனக்கு அறிமுகமானதும் அன்றைய தினமே இந்நாளில் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் முல்லைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Advertisement