விஜய் டிவியில் இருந்து போன் செய்து என்னை வேண்டாம் என்று சொல்லிட்டாங்க – ஷாக் கொடுத்த சித்ரா.

0
3933
chitra
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசம் மற்றும் ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். தற்போது இந்த சீரியல் தான் விஜய் டிவியில் நம்பர் 1. அதோடு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல். இந்த சீரியலில் இரண்டாவது தம்பி கதிருக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவிற்கு ஹிட் ஆனதற்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர்.இவர்கள் இருவரும் சேர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் ஆடி இருந்தார்கள்.

- Advertisement -

அதிலும் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு இருவரும் இணைந்து ஆடிய நடனம் வேற லெவல். ஜோடி நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இருவரும் வேறு எந்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் சித்ராவிற்கு ஸ்டார் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு பின்னர் பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சித்ரா.

அதில், ஸ்டார் ஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற என்னை அழைத்தார்கள் இதனால் நான் மிகவும் குதூகலமாக இருந்தேன் என்னுடைய நடனத்திற்காக ஆடைகளை கூட தயாராக வைத்திருந்தேன். மேலும் ரிகர்சலுக்கு கூட ஆடைகளை எடுத்து வைத்து கிளம்பும் முன்னர். எனக்கு சேனல் தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. அதில் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கு பெறுவது சரியாக படவில்லை. விரைவில் உங்களுக்கான ஒரு நல்ல தளம் கிடைக்கும். உங்களை நினைத்து பாவமாக இருக்கிறது என்று சொன்னார்கள். அதைக் கேட்டதும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் பரவாயில்லை என்று விட்டுவிட்டேன். எனக்காக யாரும் பாவப்பட வேண்டாம். எனக்காக நல்ல வாழ்க்கை இருக்கிறது எனக்காக நான் சம்பாதித்த அடையாளம் இருக்கிறது. அதை என்னிடமிருந்து யாரும் பறிக்க முடியாது என்று கூறியுள்ளார் சித்ரா.

-விளம்பரம்-
Advertisement