விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் பாண்டியன், வீட்டில் கடை கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கணக்கில் ஒரு ₹1000 விடுகிறது என்று சொல்ல பாண்டியன் அதிர்ச்சி ஆகி, உன் மகன் செய்த வேலை தான் என்று சொன்னவுடன் கதிர், நான் எடுக்கவில்லை என்கிறார். கடைசியில் செந்தில் பொய் சொல்லி சமாளிக்க, பாண்டியனும் நம்பி விடுகிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் மொபைலுக்கு தங்கமயில், தாங்கள் எடுத்த போட்டோக்களை அனுப்பி இருந்தார். அதை பார்த்து ஆச்சரியப்பட்டும், தங்கமயிலை பற்றி பெருமையாகவும் பாண்டியன் பேசி இருந்தார்.

இந்த வாரம் தங்கமயில், பாண்டியன் வீட்டிற்கு வீடியோ கால் செய்து பேசி இருந்தார். அப்போது, ஏன்? என்னுடைய போட்டோவிற்கு யாருமே எந்த ரிப்ளையும் பண்ணவில்லை என்று வருத்தப்பட்டு பேச எல்லோருமே அவருக்கு மெசேஜ் அனுப்பினார்கள். இதை பார்த்து கோமதி புலம்பி இருந்தார். உடனே பாண்டியன், வீடியோ கால் செய்து கோமதியை சமாதானம் செய்தார். இதையெல்லாம் ராஜீ- மீனா இருவருமே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் தன் வீட்டிற்கு அண்ணன் வந்ததை பார்த்து ராஜி அம்மா வடிவு அதிர்ச்சி ஆகி இருந்தார்.
அப்போது ராஜி சித்தப்பா, உங்களுக்கு கஷ்டம் என்று எங்களிடம் கேட்டால் பணத்தை கொடுப்போம். நீங்கள் எதற்காக அன்னி நகை வாங்கினீர்கள்? என்று சொன்னவுடன், நான் எதற்கு என் தங்கைக்கு போட்ட நகையை வாங்க போறேன்? என்று கோபமாக பேசி விட்டு சென்று விட்டார். கடைசியில் ராஜியின் அப்பா, எங்கே நகை? என்ன செய்தாய்? என்று கேட்க எதுவுமே பேசாமல் அமைதியாக வடிவு நிற்கிறார். உண்மையை சொல்லும் வரை இந்த வீட்டில் தண்ணி, சாப்பாடு எதுவுமே சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில், சரவணன்-தங்கமயில் இருவரும் சேர்ந்து ரொமான்ஸாக புகைப்படத்தை எல்லாம் எடுத்து இருந்தார்கள். ஆனால், அதை தங்கமயில் தெரியாமல் ஃபேமிலி குரூப்பில் அனுப்பி இருந்தார். இதை பார்த்த செந்தில், கதிர், சித்தப்பா மூவருமே அதிர்ச்சியாகி விடுகிறார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன் போனை கேட்க, எல்லோரும் தடுக்க பார்க்க, பாண்டியன் போட்டோவை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி விட்டார். இன்னொரு பக்கம் மீனா- ராஜி- கோமதி எல்லோருமே தங்கமயில் அனுப்பிய போட்டோவை பார்த்து கிண்டல் கேலி செய்து, பாண்டியனிடம் வம்பு இழுத்தர்கள்.

சீரியல் ட்ராக்:
கடைசியில் செந்தில், சரவணனுக்கு போன் செய்து போட்டோ விஷயத்தை சொல்ல, சரவணன்- தங்கமயில் இருவரும் அதிர்ச்சியாகி தங்கமயில் போட்டோவை டெலிட் செய்ய பார்க்கிறார். ஆனால், மாத்தி பண்ணி விடுகிறார். சரவணனனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில், ராஜி டியூஷன் எடுக்கும் இடத்திற்கு வந்த அவருடைய சித்தப்பாவிற்கு உண்மை அறிந்து கோபப்பட்டு நிற்கிறார்.
https://youtu.be/euvYJBwc9rk?si=3r6EP56htRboTynx
சீரியல் ப்ரோமோ:
இன்னொரு பக்கம் நகை விஷயத்தை கேட்டு ராஜிவின் அப்பா வடிவை அடித்து கீழே தள்ள பார்க்கிறார். அப்போது மாரி, உங்கள் மகளுக்காக தான் நகையை கொடுத்தார் என்று உண்மையை சொல்கிறார். அப்போது அங்கு வந்த சித்தப்பா, ராஜி டியூசன் எடுக்கும் விஷயத்தை சொல்ல, அண்ணன் தம்பி இருவருமே பாண்டியனிடம் சண்டைக்கு போகிறார்கள். அப்போது, எங்க பெண்ணிடம் நகையை வாங்க சொல்லி, டியூஷனுக்கு அனுப்பி சம்பாதித்து சாப்பிடுகிறாயா? என்று கேவலமாக பேசுகிறார்கள். உடனே பாண்டியன், டியூஷன் எடுப்பது உண்மையா? என்று கேட்டவுடன் ராஜு ஒத்துக் கொள்கிறார்.






