பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவை இதுவரை மாடர்ன் உடையில் பார்த்துள்ளீர்களா ? இதோ புகைப்படம்.

0
1045
hema
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் அந்த சேனலின் டாப் சீரியலாக திகழ்ந்து வருகிறது. இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், சித்ரா, சாந்தி வில்லியம்ஸ் என்று பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த தொடரில் மீனா என்ற கதாபத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா என்கிற ஹேமா.

-விளம்பரம்-

இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் துறை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார்.அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார்.பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார்.

- Advertisement -

இதை தொடர்ந்து இவர் குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி, இவன் யார் என்று தெரிகிறதா, போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் முதல் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு குழந்தை பிறந்தது.

இதனால் சீரியலில் கொஞ்ச நாள் பிரேக் எடுத்துக்கொண்டார். இருப்பினும் கடந்த சில நாட்களாக இவரை போன் மூலமாகவே நடித்து அந்த காட்சிகளை பாண்டியன் ஸ்டோர்ஸில் ஒளிபரப்பி வருகின்றனர். இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாடர்ன் உடைகளில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement