எப்படியோ உங்க அப்பா குடும்பத்தை பிரிச்சிட்டார், எல்லாரும் போய்ட்டா எப்படி வீடு கட்டுவீங்க – ரசிகர்கள் கமென்டிற்கு மீனாவின் சூசக பதில்.

0
534
Hema
- Advertisement -

உங்க அப்பா குடும்பத்தை பிரித்து விட்டார். அடுத்து என்ன? என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா என்கிற ஹேமா. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை.

- Advertisement -

ஹேமா குறித்த தகவல்:

இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் நிலை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருந்தார். அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி இருந்தார். பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார்.

ஹேமா நடித்த சீரியல்கள்:

இதை தொடர்ந்து இவர் மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் முதல் தம்பி ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், ஜீவா-மீனா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவை பெற்று வருகிறது. அதிலும் இவர் சீரியலில் காமெடி, வில்லி, நல்லவர் என மூன்றும் கலந்த கலவையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஹேமா:

இவருடைய இயல்பான பேச்சும், நடிப்பும் இந்த சீரியலுக்கு கூடுதல் பலம் என்று சொல்லலாம். அதேபோல் இந்த சீரியல் மூலம் இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது சீரியலில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் ஜீவா தன் குடும்பத்தை விட்டு மீனா வீட்டிற்கு வந்துவிட்டார். அவரை தொடர்ந்து கண்ணன், ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்கள். இப்படி அடுத்து என்ன நடக்கும் என்ற பல எதிர்பார்ப்புடன் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஹேமா பதிவு:

இந்த நிலையில் மீனாவிடம் ரசிகர்கள், உங்க அப்பாவால் குடும்பம் உடைந்து விட்டது. இனி கண்ணனும் தனியாக போய்விடுவார். ஏற்கனவே நீங்க தனியாக வந்தாச்சு. நீங்க புது வீடு எப்ப கட்ட போறீங்க? என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதை பார்த்த மீனா, இன்று உலகம் அழியும் என்று கவலைப்பட வேண்டாம். இது ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நாளை என்று பதிவு செய்கிறார். தற்போது மீனாவின் இந்த ட்விட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement