குடும்பத்துடன் திருப்பதி சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா – பக்தர்களுக்கு சொன்ன அந்த ரகசிய இடம். வீடியோ இதோ.

0
840
hema
- Advertisement -

சமீப காலமாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. அதில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான குடும்பக் கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா என்கிற ஹேமா. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் துறை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார்.

- Advertisement -

ஹேமா நடித்த படங்கள்:

அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து இருந்தார். பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி, இவன் யார் என்று தெரிகிறதா போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். இருந்தாலும் இதுவரை இவரருக்கு கிடைக்காத புகழ் எல்லாம் பாண்டியன் ஸ்டோர் மீனா கதாபாத்திரம் மூலம் கிடைத்து வருகிறது.

திருப்பதி சென்ற மீனா:

அதோடு இவரை பார்ப்பதற்கு என்றே ஓரு கூட்டம் உள்ளது. மேலும், ஹேமா நிஜத்தில் பிரசவ நாளில் அவருக்கு லீவு கொடுத்து அனுப்பி இருந்தார்கள். மூன்று மாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் மீனா சீரியலில் என்ட்ரி கொடுத்தார். இது ஒருபக்கம் இருக்க, இவர் யூடுயூப்பில் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் தான் அடிக்கடி நடத்தும் போட்டோ ஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஹேமா தனது குடும்பத்துடன் திருப்பதி தரிசனத்திற்கு சென்றிருக்கிறார். கணவர், அப்பா, தம்பி, தங்கை என ஒட்டுமொத்த குடும்பத்துடனும் மீனா திருப்பதி சென்று இருந்தார்.

-விளம்பரம்-

மீனா பதிவிட்ட வீடியோ:

அப்போது அவர் வீட்டில் இருந்து எடுக்கத் தொடங்கிய வீடியோவை கீழ்த்திருப்பதி சென்றதும் மேல் திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு சாமி தரிசனத்திற்கு சென்று வந்தது என அனைத்தையும் அந்த வீடியோவில் அப்டேட் செய்திருந்தார். இவர் சென்ற அதே நாளில் சந்திரபாபு நாயுடுவும் சாமி தரிசனத்திற்கு வந்ததையும் ஹேமா குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் அவர் முக்கியமான ரகசியத்தையும் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சொல்லி இருக்கிறார்.

பெருமாள் பாதம் தலம்:

அது என்னவென்றால், பெரும்பாலும் திருப்பதி செல்பவர்கள் சாமி தரிசனம் முடித்து விட்டு அருகில் இருக்கும் பால்ஸில் குளித்து விட்டு வீடு திரும்புவார்கள். ஆனால், திருப்பதியில் சுற்றிப் பார்க்க ஏகப்பட்ட குட்டி குட்டி வழிபாட்டு தலங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் பெருமாள் பாதம். திருப்பதி செல்பவர்கள் நேரம் இருந்தால் கட்டாயம் இங்கு சென்று வரும் படி மீனா கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் திருப்பதி செல்லும் ரசிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பலரும் இந்த வீடியோவை பகிர்ந்தும் வருகிறார்கள்.

Advertisement