கேன்சர் பயம், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவிற்கு நடந்த திடீர் ஆப்ரேஷன். என்ன ஆனது தெரியுமா ?

0
1124
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி ஆபரேஷன் செய்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா என்கிற ஹேமா. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் நிலை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : 4 மாதத்திற்கு முன்பே அஜித்துடன் இருந்து கிடைத்த பிறந்தநாள் வாழ்த்து – கைப்பட எழுதி வாழ்த்து சொன்னதோடு, போனிலும் வாழ்த்து சொன்ன அஜித்.

ஹேமா பற்றிய தகவல்:

அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி இருந்தார். பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ஹேமாவின் யூடியூப் சேனல்:

இந்த சீரியலில் இவர் முதல் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், ஜீவா-மீனா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவை பெற்று வருகிறது. அதிலும் இவர் சீரியலில் காமெடி, வில்லி, நல்லவர் என மூன்றும் கலந்த கலவையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய இயல்பான பேச்சும் நடிப்பும் இந்த சீரியலுக்கு கூடுதல் பலம் என்று சொல்லலாம். அதேபோல் இந்த சீரியல் மூலம் இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இது ஒரு பக்கமிருக்க, ஹேமா அவர்கள் கொரோனா லாக் டவுன் சமயத்தில் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி இருந்தார்.

ஹேமா ஆபரேஷன் வீடியோ:

அதில் அவர் பல வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். இந்த நிலையில் ஹேமா அவர்கள் தன்னுடைய யூடியூப் சேனலில் எனக்கு ஆபரேஷன் என்ற டைட்டிலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன ஆச்சு? என்று கேட்டார்கள். அதாவது, சில மாதங்களாக ஹேமாவின் கழுத்துக்கு கீழான பகுதியில் நான்கு சென்டிமீட்டர் அளவில் கட்டி ஒன்று இருந்துள்ளது. இதைப் பற்றி டாக்டரிடம் செக் செய்த பின்னர் இது கேன்சர் கட்டியாக மாறி விடுமோ என பயந்து நடுங்கி ஹேமா ஒவ்வொரு முறையும் ஹாஸ்பிடல் வந்து இருந்தார்.

ஹேமா ஆபரேஷன் குறித்த தகவல்:

பின் அவர் அந்த கட்டியை நினைத்து தூங்காமலும் தவித்து இருந்தார். அதன் பிறகு அவர் மொத்த குடும்பத்துடனும் சேர்ந்த ஆலோசித்த பின்பு கட்டியை நீக்க முடிவு செய்து இருக்கிறார். அதற்காக செய்யப்பட்ட ஆபரேஷன் தான் இது. இந்த ஆபரேஷனில் அவருடைய தங்கை அவருடனே இருந்து ஹேமாவை கவனித்துக் கொண்டார். இந்த ஆபரேஷன் பற்றி ரசிகர்களிடம் ஷேர் செய்த ஹேமா, பெண்கள் தங்கள் உடல் பகுதியில் இருக்கும் கட்டிகளை அலட்சியம் காட்டவேண்டாம். உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement