4 மாதத்திற்கு முன்பே அஜித்துடன் இருந்து கிடைத்த பிறந்தநாள் வாழ்த்து – கைப்பட எழுதி வாழ்த்து சொன்னதோடு, போனிலும் வாழ்த்து சொன்ன அஜித்.

0
167
ajith
- Advertisement -

அஜித் தனது ரசிகர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி இருக்கும் ஆடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் 300 கோடியை நோக்கி சென்று இருந்ததாக இந்த படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : டீ கடை சந்திப்பு, 10 வருடம் வைட்டிங்கில் காதல் – வெற்றிமாறன் மனைவி மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்.

ஏகே 61 படம்:

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறித்து இருக்கிறார். முதலில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிப்பதாக கூறி இருந்த நிலையில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஏகே 61 படம் குறித்த தகவல்:

இந்த படம் ஒரு வங்கி சம்பந்தமான பிரச்சனையை மையமாக கொண்ட கதை என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தில் ராஜதந்திரம் வீரா, சமுத்திரக்கனி உட்பட பல நடிகர்கள் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூலை இரண்டாம் பாதியில் புனேவில் தொடங்க இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக உள்ள தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

ஏகே 62 படம்:

விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணியில் படம் உருவாக இருப்பது ரசிகர் மத்தியில் பெரிய சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்படம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித் தனது ரசிகர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி இருக்கும் ஆடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

அஜித் கூறிய பிறந்த நாள் வாழ்த்து:

அதாவது, 10 10 2022 அன்று பிறந்தநாள் கொண்டாட இருக்கும் ரசிகர் ஒருவருக்கு கைப்பட வாழ்த்து கடிதம் எழுதி ஆட்டோகிராப் போட்டுள்ளார். மேலும் அவருக்கு போனில் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார். அந்த ஆடியோவில், ஹாப்பி பர்த்டே, ஹாப்பி பர்த்டே, ஆரோக்கியமாக, சந்தோஷமாயிருங்க. நேரில் மீட் பண்ணுவோம் என்று பேசி இருக்கிறார். இந்த ஆடியோவை ஒரு வீடியோ உடன் இணைத்து அஜித் ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

Advertisement