நீங்க அழறத பாத்து நாங்க அழுதோம், நீங்க இப்படி ஆட்டம் போடுறீங்க- வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

0
1024
pandian
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முதல் இடத்தில் உள்ளது என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இந்த சீரியல் முழுக்க முழுக்க அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்ட கதை. இதில் அண்ணன், தம்பிகள் அனைவரும் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். மூர்த்தி என்பவர் தான் குடும்பத்திற்கு பெரிய அண்ணன்.

-விளம்பரம்-

மூர்த்தி மற்றும் அவர்களின் சகோதர்களுக்கு அம்மாவாக நடித்து வந்தவர் தான் லக்ஷ்மி அம்மா. அதோடு இந்த சீரியல் தினம் தினம் பல விறுவிறுப்பான காட்சிகள் தந்து வருகிறது. சமீபத்தில் தான் சீரியலில் லட்சுமி அம்மா இறப்பது போன்ற காட்சி காட்டப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சோகத்தில் உறைந்து போனது அனைவருக்கும் தெரிந்தே. இதை பார்த்து மக்களும் கண்ணீர் குளத்தில் மூழ்கினார்கள் என்று சொல்லலாம்.

- Advertisement -

அந்த அளவிற்கு இந்த காட்சி ரொம்ப எமோசனலாக இருத்தது. இது குறித்து கூட சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள். இந்நிலையில் லட்சுமி அம்மா இறந்த காட்சி எடுக்கப்பட்ட பிறகு நடிகர் வெங்கட் அவர்கள் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் அடிக்கடி ஷூட்டிங் தளத்தில் எடுக்கும் ஆப் ஸ்கிரீன் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெங்கட் அவர்கள் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சீரியலில் லக்ஷ்மி அம்மா இறந்த காட்சி எடுக்கப்பட்ட பிறகு ஜீவா அவர்கள் செம குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இந்த இசைக்கு யாராவது ஆடாமல் இருப்பார்களா! என்று கூறி உள்ளார். இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் இந்த காட்சியில் நீங்கள் அழுததைப் பார்த்து நாங்களும் பயங்கரமாக அழுந்து விட்டோம். ஆனா, நீங்க என்னன்னா இந்த குத்து குத்தறிங்களே என்று வேடிக்கையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இவர் பதிவிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement