விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா அறிவுமணி, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.
மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.இந்த சீரியலில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல்.
இதையும் பாருங்க : அனிதா போட்ட பதிவு, Fake ஐடியால் பாதிக்கப்பட்ட இளம் மாடல். போலீசில் புகார்.
இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், ஹேமா, காவ்யா என்று பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இந்த தொடரில் வரும் துணை நடிகர்களும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வரும் கம்பம் மீனாவி பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார்.
இவரது டைலாக் டெலிவரிக்கு என்றே ரசிகர் கூட்டம் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இவரது மகனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மீனா.புதுமண தம்பதிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.