அனிதா போட்ட பதிவு, Fake ஐடியால் பாதிக்கப்பட்ட இளம் மாடல். போலீசில் புகார்.

0
788
anitha
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனிதா சம்பத், தனது இன்ஸ்த பக்கத்தில் போட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீப காலமாகவே சினிமாவில் உள்ள பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக கூறி வருகிறார்கள். சினிமா துறையை பொறுத்தவரை நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை வருவது வாடிக்கையான ஒரு விஷயம் தான்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் casting director என்ற பெயரில் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பெண்களை குறிவைத்து அவர்களை அட்ஜெட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறிய நபரின் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த ஸ்க்ரீன் ஷாட்டில், நிஷு என்று பெயர் குறிப்பிடப்பட்டு இருந்த அந்த இன்ஸ்ட்டா கணக்கில் இருந்து பெண் ஒருவருக்கு மெசேஜ் செய்யப்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : வடிவேலுவின் பல காமெடி முதல் கனா காணும் காலங்கள் வரை நடித்த இவர் பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு சொந்தமாம்.

- Advertisement -

அதில், பெண் ஒருவருக்கும் பெரிய நடிகரின் படத்தில் வாய்ப்பு தருவதாகவும் அதற்கு அட்ஜெட்மென்ட் செய்ய வேண்டும் என்றும் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுக்கவே, விஜய் டிவில வாய்ப்பு கிடைக்கும், சினிமானா அட்ஜெட்மென்ட் தான், யோசிச்சா பெரிய லெவல்ல வரமுடியாது என்றும் கூறி இருந்தார். இதனை அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து எச்சரிக்கை செய்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் அனிதா குறிப்பிட்ட சம்மந்தபட்ட நபர் நம்மை தொடர்பு கொண்டார், அவர் பேசியது ‘அனிதா சம்பத் போட்ட அந்த பதிவில் இருப்பது தன்னுடைய Fake ஐடி தான் என்றும், இதுகுறித்து அனிதா சம்பத்திடமே தான் கூறியதாகவும், அவரும் அது குறித்து மீண்டும் ஒரு பதிவை போட்டதாகவும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், தான் ஒரு மாடல் என்றும் இதுபோன்ற fake ஐடியால் தன்னை பற்றிய பல தவறான செய்திகள் பரவி வருதாகவும், இதனால் பல பிரச்சனைகளை சந்தித்ததாகவும் கூறி இருந்தார். மேலும், இது அனிதா சம்பத், பல மாதங்களுக்கு முன் போட்ட பதிவு. அப்போதே அவரிடம் இதை பற்றி கூறி இருந்தேன். அவரும் அந்த Fake ஐடி குறித்து பதிவை போட்டுவிட்டார்.

நானும் அந்த Fake ஐடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இருந்தார். அதே போல ஒரு தவறு நேர்ந்தால் சம்மந்தபட்ட இரண்டு தரப்பிடமும் விளக்கம் கேட்டு பின்னர் செய்தியை வெளிட்டால் நன்றாக இருக்கும், எந்த தவறும் செய்யாமல் தன்னுடைய பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் கூறியிருந்தார்.

Advertisement