இறந்து போன அம்மாவிற்காக உண்மையாகவே மொட்டை அடித்துக்கொண்டு கொடுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.

0
1520
pandian
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் ஒரு முக்கிய இடத்தில் உள்ளது என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இந்த சீரியல் முழுக்க முழுக்க அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்ட கதை ஆகும்.

-விளம்பரம்-

மேலும், இதில் அண்ணன், தம்பிகள் அனைவரும் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். மூர்த்தி என்பவர் தான் குடும்பத்திற்கு பெரிய அண்ணன். மூர்த்தி மற்றும் அவர்களின் சகோதர்களுக்கு அம்மாவாக நடித்து வந்தவர் தான் லக்ஷ்மி அம்மாள். தற்போது இந்த சீரியலில் லட்சுமி அம்மாள் இருந்துவிட்டார்.

இதையும் பாருங்க : போட்றா வெடிய, திருவிழா நாளில் வெளியாக இருக்கும் வலிமை – போனி கபூர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.

- Advertisement -

கடந்த சில தினங்களாக சிரியலில் இந்த கதை தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கடைக்குட்டி கண்ணன் தன் அம்மா முகத்தை கடைசி வரை பார்க்க முடியவில்லையே என்று கதறினார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கண்ணன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை மட்டுமில்லை, ஒட்டு மொத்த சீரியல் ரசிகர்களையும் கலங்க வைத்துவிடுகிறான்.

அம்மாவின் அஸ்தியை எடுக்க மயானத்திற்கு அடுத்த நாள் காலை தன் அண்ணன்கள் வருவதற்கு முன்பே சுடுகாட்டிற்கு சென்று லட்சுமி அம்மாவுக்கு பால் ஊற்றி சடங்குகளை செய்கிறான். அதுமட்டுமில்லை மொட்டையும் அடித்துக்கொண்டு இருக்கிறார் கண்ணன். ஒரு சீரியலுக்காக இப்படி நிஜமாகவே மொட்டை அடித்துக்கொண்டுள்ள சரவண விக்ரமின் இந்த டெடிகேஷனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement