பட்டம் பெற்ற கையோடு பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இருந்து விலகுகிறார் முல்லை – அவரே சொன்ன விளக்கம்.

0
412
kavya
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகுவது குறித்து காவியா அறிவுமணி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சீரியலில் ஒன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இது ஒரு யதார்த்தமான குடும்ப கதை. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
kavya

மேலும், இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோவை கூட சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள். தற்போது பல திருப்பங்களுடன் சீரியல் செல்வது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகுவது குறித்து காவியா அறிவுமணி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

காவ்யா குறித்த தகவல்:

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் காவியா அறிவுமணி. இவர் ஏற்கனவே, பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாகியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் காவியா சீரியலை விட்டு விலக இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

காவ்யா வாங்கிய படம்:

ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன் காவியா ஆர்கிடெக்சர் படிப்பை முடித்து பட்டமும் பெற்று இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் காவியாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சீரியலில் இருந்து காவியா விலகிவிட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து காவியாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியிருந்தது, இன்னும் அதிகாரப்பூர்வமாக நான் எதுவும் இது பற்றி சொல்ல முடியாது.

-விளம்பரம்-

காவ்யா அளித்த பேட்டி:

ஆனால், சமீப காலமாக நான் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறேன். நான் நடித்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கின்றது. அந்த படங்களுக்கு பிறகு தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன். அதேபோல் சில தினங்களுக்கு முன்புதான் எனக்கு நான் படித்து முடித்து பட்டம் வாங்கி இருக்கிறேன். கல்லூரியில் நான் எல்லோரிடமும் சாதாரணமாக தான் இருந்தேன்.

6

சினிமா வாய்ப்பு குறித்து காவ்யா சொன்னது:

ஆனால், அவர்கள் எல்லோரும் என்னை பார்த்த விதமே வேறு மாதிரி இருந்தது. ஆர்க்கிடெக்ட் ஆகணும் என்று ஆசைப்பட்டு தான் அந்த துறையை தேர்ந்தெடுத்தேன். தற்போது ஆர்க்கிடெக்ட் பட்டத்தை வாங்கிய தருணம் ரொம்பவே சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. அடுத்து மேற்படிப்பு படிக்கணும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. வெள்ளி திரையில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது மட்டும் தான் என்னுடைய லட்சியம் என்று கூறியிருந்தார்.

Advertisement