பரத், கவின் படத்தை தொடர்ந்து மாஸ்டர் பட நடிகருக்கு ஜோடியான காவ்யா. (எல்லாம் முல்லை ரோலின் கை ராசி தான்)

0
399
kavya
- Advertisement -

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியலில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஒன்று. ஒரு சாதாரண குடும்பக்கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை.

-விளம்பரம்-

இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.
அதோடு இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் கதிர் – முல்லை கதாபாத்திரம் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று சொல்லலாம். ஆரம்பத்தில் இதில் முல்லையாக நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார்.

- Advertisement -

காவ்யா நடிக்கும் சீரியல்கள்:

காவ்யா அவர்கள் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்து இருந்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அது மட்டுமல்லாமல் இவருக்கு தளபதி நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. ஆனால், சில காரணங்களால் பிகில் படத்தின் வாய்ப்பை தவறவிட்டேன் என்று காவ்யா தெரிவித்திருந்தார்.

பரத் படத்தில் கமிட்டான காவ்யா:

மேலும், இந்த முல்லை கதாபாத்திரத்தின் மூலம் இவருக்கு தற்போது படவாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. சக்திவேல் என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க காவ்யா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதில் பரத் மற்றும் வாணி போஜன் நடிக்கிறார்கள். மேலும், அப்படத்தின் பூஜை அண்மையில் வந்தது. இந்த படத்தின் பூஜையில் காவ்யா கலந்துகொண்ட புகைப்படம் எல்லாம் சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தது. பின் கவின் நடிக்கும் ‘ஊர்குருவி’ படத்தில் காவ்யா நடிக்கிறார் என்ற தகவல் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

கவின் நடிக்கும் ‘ஊர்குருவி’ படத்தில் காவ்யா:

இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் படத்தில் கதாநாயகியாக காவ்யா ஒப்பந்தமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் சின்னவயது வில்லன் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மாஸ்டர் மகேந்திரன் படத்தில் காவ்யா:

இதனை தொடர்ந்து தற்போது மாஸ்டர் மகேந்திரன் ‘ரிப்பப்பரி’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை காவ்யா ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவ்யா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் காவ்யா வெப் சிரிஸிலும் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து பல படங்களில் காவ்யா ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதனால் இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து விலகி விடுவாரா? என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Advertisement