விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.
இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் குமரன் – சித்ரா நடித்து வந்த கதிர் – முல்லை கதாபாத்திரத்தாம் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று வேண்டும். ஆனால், சித்ரா இறந்துவிட்ட பின்னர் அவருக்கு பதில் காவ்யா நடித்து வருகிறார். நடிகர் குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு முன்னர் சில சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு மிகபெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
நடிகர் குமரன், சீரியல் நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார்.ஜோடி நம்பர் 1 சீசன் 3 சுஹாசினி, கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சுஹாஷினி. கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான மையம் என்ற படத்தில் நடிகை சுஹாசினி நடித்திருந்தார்.அதற்கு முன்பாகவே ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார் சுஹாசினி . சீரியலில் வாய்ப்பு குறைந்ததால் நடிகை சுகாசினி, குமரணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரது திருமணமும் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான குழந்தையும் பிறந்தது. சமீபத்தில் இவர்கள் தங்களது 6வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக தனது மனைவியுடன் இருக்கும் சில ஃபோட்டோஷூட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார் நடிகர் குமரன்.நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன், உலகம் என்னவாக நான் இருக்க விரும்புகிறதோ அது போல நான் இருக்க மாட்டேன், நான் என்னவாக இருக்க நினைக்கிறேனோ அது போலவே நான் எப்போதும் இருப்பேன். இதை பற்றி இதுவரை புகார் ஏதும் தெரிவிக்காததற்கு நன்றி என்று கூறி உள்ளார்.