இதனால் தான் ஸ்டார் ஜோடியில் கலந்து கொள்ளவில்லை – இன்னும் ஓயலயா குமரன் சித்ரா பஞ்சாயத்து.

0
18200

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. அதிலும் ‘முல்லை– கதிர்’ கதாபாத்திரத்தில் சித்ரா, குமரன் நடித்து வருகிறார்கள். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலில் வெற்றிக்கு ஒரு காரணம் என்று கூட சொல்லலாம். சீரியலில் இவர்கள் இருவரின் ரோமன்ஸ் படு ஜோராக சென்று கொண்டு இருந்தாலும் நிஜத்தில் இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக தான் இருக்கிறார்கள் என்று சீரியலில் இருக்கும் சிலர் கூறி வருகின்றனர்.

இந்த பஞ்சாயத்து ஒன்னும் புதிதான ஒரு விஷயம் அல்ல, இவர்கள் இருவரும் ஜோடி நிகழ்ச்சில் இருந்தபோதே இவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு அடிக்கடி சண்டை வருமாம். இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் சீரியலில் இருந்து விலகப்போவதாக கூட பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்று சித்ரா மற்றும் குமரன் பேட்டி ஒன்றில் தெரிவித்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஸ்டார் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ஒரு ஜோடி கூட கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து சித்ரா,கூறுகையில், ”சேனல்ல இருந்து என்னைக் கூப்பிட்டது நிஜம். காஸ்ட்யூம், பாட்டெல்லாம் ரெடி பண்ணிட்டேன். கோரியோகிராஃபர் கமிட் ஆகிட்டார். மறுநாள் ரிகர்சலுக்குப் போகணும்கிற சூழல்ல, முதல்நாள் நைட் பேசி ‘இல்ல சித்ரா நீங்க வரவேண்டாம்; உங்களோட ஜோடியா ஸ்டேஜ் ஏற குமரன் மறுத்துட்டார்’னு சொல்றாங்க.

என்னைப் பொறுத்தவரை சேனல் எந்தவொரு நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாலும் ‘நோ’ சொல்லாம கலந்துட்டு வர்றேன். யார் வரலைன்னாங்களோ, அவங்களைப் போய்த்தான் நீங்க காரணம் கேக்கணும்” என்று கூறியுள்ளார் சித்ரா. இதுகுறித்து குமரன் கூறுகையில்,’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்ல நடிச்சிட்டிருக்கிற மூணு ஜோடிகளையுமே நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. இதுதான் நிஜம். எல்லாருக்குமே அந்தத் தேதியில பர்சனல் கமிட்மென்ட் இருந்ததுங்கிறதுதான் உண்மை. அதனாலதான் யாருமே அந்த ஷோல கலந்துக்க முடியலை. ஆனா, ‘ஏன் வரலை’ன்னு எங்கிட்ட மட்டுமே கேட்டு, இதைப் பெரிய பிரச்னையா ஏன் ஆக்குறாங்கன்னு தெரியலை. அந்தத் தேதியில கலந்துக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement