பாண்டியன் ஸ்டோர்ஸ்’ல இருந்து நான் விலகப்போறேன்னு சொல்ல இதுதான் காரணம் – குமரன் அளித்த விளக்கம்.

0
4026
kumaran
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தான் விலகப்போவதாக வந்த செய்தி குறித்து குமரன் பதில் அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் தற்போதைய சூப்பர் ஹிட் தொடராக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. குடும்ப பந்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் மூன்று ஜோடிகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்னவோ கதிர்-முல்லை ஜோடி தான். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-
kumaran

. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலை விட்டு குமரன் விரைவில் விலகப்போவதாக தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே குமரன் சமீபத்தில் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி தான். அதில், நீங்கள் அனைவரும் நிகழ்ச்சியை அனுபவித்தீர்கள் என்று நம்புகிறேன், நன்றாக நான் செய்தேன். நானே இந்த நிகழ்ச்சியின் சிறந்த பார்வையாளனாக இருந்து, நிகழ்ச்சி முழுவதும் சிரித்துக் கொண்டே இருந்தேன். மேலும் நீங்கள் பார்த்தது தான் நிகழ்ச்சி.

இதையும் பாருங்க : எதுக்கு பிக் பாஸ் போனீங்க – ரசிகர் கேட்ட கேள்விக்கு மகளை கேட்டு பதில் சொன்ன அர்ச்சனா.

- Advertisement -

அதற்கு மேல் எதுவும் இல்லை. குறைவாகவும் எதுவும் இல்லை. எதுவும் வெட்டப்படவில்லை அல்லது சேர்க்கப்படவில்லை. வெற்றி அல்லது வெற்றி இல்லை என்பதை தாண்டி நான் மகிழ்ச்சியாக இருந்தேன். அதே வழியில் நீங்கள் அனைவரும் நீங்கள் பார்த்தவற்றுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது, நாம் அனைவரும் அடுத்ததில் கவனம் செலுத்துவோம்” என்று கூறியுள்ளார். இதனால் குமாரன் இந்த சீரியலை விட்டு விலகப்போகிறாரா என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

This image has an empty alt attribute; its file name is 1-149.jpg

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள குமரன், கடந்தாண்டுக்கானவி ஜய் டிவி விருதுகள்ல எனக்கு விருது கிடைக்கலைனு சமூக வலைதளங்கள்ல என்னுடைய ரசிகர்கள் சிலர் வருத்தப்பட்டாங்க. அதுக்கு நான், ‘என் கடமையை சரியா செஞ்சேன். விருது கிடைக்குது கிடைக்கலைங்கிறது பத்தி யோசிச்சிட்டு இருக்க வேண்டாமே… அடுத்து என்னங்கிறதைப் பார்ப்போம்’னு பதில் சொல்லியிருந்தேன். என்னுடைய இந்தப் பதிவை சிலர் தப்பாப் புரிஞ்சிட்டிருக்காங்கபோல. அப்படிப் புரிஞ்சிகிட்டவங்கதான் நான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ல இருந்து வெளியேறப் போறதா நினைச்சிக்கிட்டாங்க என்று கூறியுள்ளார் குமரன்.

-விளம்பரம்-
Advertisement