ஹீரோவாக களமிறங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், குவியும் வாழ்த்துக்கள்

0
383
- Advertisement -

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் குமரன் சினிமாவில் ஹீரோவாக கமிட்டாகி இருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. ஒரு சாதாரண குடும்பத்தை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன் விக்ரம் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக்கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றிருந்தது. மேலும் இத்தொடர் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலட்சுமி ஸ்டோர்ஸ் எனவும், இந்தியாவில் எட்டு மொழிகளிலும், இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் பலர் நடித்தாலும், குமரன்- சித்ரா நடித்து வந்த கதிர்- முல்லை கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

கதிர்- குமரன்:

இப்படி ஒரு நிலையில் நடிக்க சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டு, சமீபத்தில் தான் வெளிவந்தார்‌. அதற்குப் பிறகு புதிய முல்லையாக, லாவண்யா நடித்து இருந்தார். அதே நேரத்தில் கதிர் கதாபாத்திரத்தில் குமரன் தங்கராஜன் என்பவர் நடித்திருந்தார். தற்போது இந்த சீரியல் முடிந்து, இதன் இரண்டாம் பாகம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ ஒளிபரப்பாகி வருகிறது.

குமரன் பற்றிய தகவல்:

குமரன் தங்கராஜன் ஒரு நடிகர் மட்டுமல்ல நடன கலைஞரும் ஆவார். இவர் ‘ஜோடி No 1’ நிகழ்ச்சியில் நடன கலைஞராக பணியாற்றி, பின்னர் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கும் அறிமுகமானார். அதற்குப் பிறகு ஒரு சில படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ஹீரோ ஆன குமரன்:

தற்போது குமரன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறாராம். ‘யாத்திரை’ என்ற படத்தை தயாரித்து இந்த வீனஸ் இன்பொடெயின்மென்ட் நிறுவனம் தான் குமரன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறதாம். இப்படத்தை ‘லக்கிமேன்’ படத்தை இயக்கிய பாலாஜி வேணுகோபால் இயக்குகிறாராம். மேலும், படத்தில் பிரபல நடிகர்கள் லிவிங்ஸ்டன், பாலா சரவணன் நடித்து வருகிறார்களாம். இது குறித்து நடிகர் குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்திற்கு அச்சு ராஜா மணி இசையமைக்கிறார். ஜெகதீஸ் ஒளிப்பதிவு செய்ய, மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை 6 முதல் 60 வயது வரை அனைவரும் கண்டு, ரசித்து, மகிழும் வகையில் உருவாக்கி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இச்செய்தியை அறிந்து நடிகர் குமரனின் ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றார்கள்.

Advertisement