பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் நிஜ திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? – எப்படி இருக்கார் பாருங்க.

0
305
kumaran
- Advertisement -

பொதுவாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. அதில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், இந்த சீரியலில் ஆரம்பத்தில் முல்லையாக நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார். சித்ராவின் இழப்பு சின்னத்திரையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி குடும்பத்தினர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் கடையை கட்டி திறந்து இருக்கிறாள்.ஆனால், அந்த கடையை திறக்க கூடாது என்று போலீசார் சீல் வைத்து இருந்தார்கள்.

- Advertisement -

தமிழ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இதைக் கேட்டு மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே அலுவலகத்திற்கு முன் உட்கார்ந்து போராட்டம் செய்து இருந்தார்கள். பின் போலீஸ் வந்து இவர்கள் பிரச்சனைக்கு முடிவு செய்து வைத்தது. தற்போது கடை திறப்பு விழாவிற்கு ஒட்டுமொத்த குடும்பமும் வந்து கொண்டாடி இருக்கிறது. இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி வடிநம்மா எனவும்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரீமேக்:

இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் கதிர் – முல்லை ஜோடி தான் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று சொல்லலாம். கதிர் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் குமரன். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு முன்னர் சில சீரியல்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு மிகபெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். அதுமட்டும் இல்லாமல் குமரன் நல்ல நடனக் கலைஞர் ஆவார்.

-விளம்பரம்-

குமரன்-சுஹாசினி திருமணம்:

இவர் பல நிகழ்ச்சிகளில் பணியாற்றி உள்ளார். பிறகு குமரன் சீரியல் நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். ஜோடி நம்பர் 1 சீசன் 3 , கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சுஹாசினி. இதையடுத்து சுஹாசினி ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான மையம் என்ற படத்தில் நடிகையாக சுஹாசினி நடித்திருந்தார். அதற்கு முன்பாகவே இவர் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார் . மேலும், சீரியலில் வாய்ப்பு குறைந்ததால் நடிகை சுகாசினி, குமரணை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். சுகாசினி- குமரன் திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது.

வைரலாகும் குமரன் திருமண புகைப்படம்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குமரனும் சுகாசினியும் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்கள். இது ஒரு பக்கமிருக்க குமரன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் தன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோ என அனைத்தையும் பகிர்ந்து வருவார். அதிலும் கதிர் என்ற கதாபாத்திரத்தை ரசிக்கும் ரசிகர்கள் இன்ஸ்டாவில் நிறைய பக்கங்கள் வைத்துள்ளனர். அப்படி ஒரு பக்கத்தில் குமரனின் திருமண புகைப்படம் ஒன்று பதிவாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் நம்ப பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரா என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement