நீ இன்னும் மாறவே இல்ல, கீர்த்தி சுரேஷுடன் புகைப்படம் வெளியிட்ட குமரன் – இவங்க ரெண்டு பேருக்கு எப்படி பழக்கம் தெரியுமா ?

0
866
kumaran
- Advertisement -

கீர்த்தி சுரேஷ் உடன் பாண்டியன் ஸ்டோர் நடிகர் குமரன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. அதில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாகக் கொண்டது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த தொடர் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் குமரன்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு முன்னர் சில சீரியல்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவருக்கு மிகபெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இவரை ரசிகர்கள் அனைவரும் சின்னத்திரை தளபதி என்று செல்லமாக அழைக்கிறார்கள். ஆனால், குமரன் அதை விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், சீரியலில் குமரனின் நடிப்பும், சாந்தமான குணமும் பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது.

குமரனின் திரைப்பயணம்:

இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். இவர் பல நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி இருக்கிறார். தற்போது குமரன் அவர்கள் சீரியல்களில் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்ஸிலும் நடிக்க இருக்கிறார். கூடிய விரைவில் அவரை ரசிகர்கள் வெப் தொடரில் பார்க்கப் போகிறார்கள். குமரனின் நடிப்புத் திறமைக்கும், நடன திறமைக்கும் ஏற்ற வகையில் ஒரு கதை அமைந்து இருக்கிறது. இதற்கான பூஜைகள் சமீபத்தில் தான் நடைபெற்றிருந்தது.

-விளம்பரம்-

குமரன் பதிவிட்ட பதிவு:

மேலும், இந்த சீரிஸில் குமரன் மட்டுமில்லாமல் பல சின்னத்திரை பிரபலங்கள் நடிக்கின்றனர். திருமதி ஹிட்லர் புகழ் அமித், கயல் சீரியல் சைத்ரா ரெட்டி என பல சின்னத்திரை பிரபலங்கள் இந்த சீரிஸில் இணைகின்றனர். இந்நிலையில் குமரன் அவர்கள் பதிவு ஒன்றே போட்டிருந்தார். அதில் அவர், கீர்த்தி சுரேஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட நாள் கழித்து உங்களை சந்திப்பதில் சந்தோஷமாக இருக்கிறது.

இது என்ன மாயம் படம்:

முன்பு எப்படி இருந்தீர்களோ அதே மாதிரி தான் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறீர்கள் என்று பதிவிட்டிருந்தார். இப்படி குமரன் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும், கீர்த்தி சுரேஷுக்கும் குமரனுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால் இவர்கள் இது என்ன மாயம் என்ற படத்தில் குமரன் நடித்திருந்தார். ஏ எல் விஜய் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் இது என்ன மாயம். இந்த படத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவியா செட்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் குமரனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement