விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் ஸ்டாலின், குமரன், சுஜித்ரா, வெங்கட் முல்லை என்று பலர் நடித்து வருகிறார்கள். அதில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட்டிற்கு ஜோடியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி, இவன் யார் என்று தெரிகிறதா, போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை குமரன் ஜோடிக்கு பிறகு ஜீவா மீனா ஜோடி தான் பிரபலம்.
இந்த சீரியல் 500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதே போல இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஹேமா உண்மையிலேயே கர்ப்பமாக இருந்து வந்தார். அதனை சமாளிக்கும் விதமாக இவர் நடித்து வந்த மீனா கதாபாத்திரமும் கர்ப்பமாக இருப்பது போல காட்சிகளை அமைத்தார்கள். சமீபத்தில் ஹேமாவிற்கு குழந்தை பிறந்தது. அதேபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா விற்கும் பெண் குழந்தை பிறந்தது.
ஆனால், குழந்தை பிறந்ததால் மீனா கதாபாத்திரம் அடிக்கடி வீடியோ காலில் பேசுவது போல காண்பித்து சமாளித்து வந்தனர். அதே போல இந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா என்று இந்த நிகழ்ச்சி மூன்று மணி நேரம் ஒளிபரப்பானது. அந்த குழந்தைக்கு கயல் என்று பெயர் வைத்தனர். இப்படி ஒரு நிலையில் அந்த குழந்தையின் நிஜமான அம்மா அப்பாவிவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.