பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு முதல் புத்தாண்டு பரிசை மேடையில் கொடுத்த நபர். வைரலாகும் வீடியோ.

0
37287
Mullai

நடிகை சித்ரா அவர்கள் விஜேவாக தான் அறிமுகமானார். பின் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்தார். பின்னர் படிப்படியாக பல சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், ஹேமா விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில் மூன்றாவது ஜோடியாக வருபவர் தான் கதிர்– முல்லை. இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம். மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்.

இதையும் பாருங்க : விஜய் தான் என் எதிர்பார்பிற்கு காரணம். அவர் மீது தான் பழி போடுவேன். நடிகை சுனைனா பேட்டி.

- Advertisement -

சீரியல் நடிகையாக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகை சித்ரா. அதோடு சினிமா படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. தற்போது விஜய் டிவியில் வசூல் வேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ”முல்லை சித்ரா” என்ற குரூப் ஒன்றை ஓபன் செய்து ரசிகர்கள் சித்ரா குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த வருடம் புத்தாண்டு நிகழ்விற்காக நடிகை சித்ரா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் நடிகை சித்ராவிற்கான முல்லை ரசிகர் மன்றம் ரசிகர்கள் அவருக்கு பரிசு ஒன்றை வழங்கி உள்ளார்கள். அந்த பரிசில் அவருடைய(முல்லை) புகைப்படம் இருந்தது.

chitra

இந்த வருடம் சித்ராவிற்கு கிடைத்த முதல் பரிசு இது தான். மேலும், அவருடைய ரசிகர்களிடம் இருந்து கிடைத்ததில் சித்ரா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார் சித்ரா. உண்மையிலேயே நடிகை சித்ராவிற்கு இருக்கிற ரசிகர்கள் கூட்டத்தை விட பாண்டியன் ஸ்டோர் முல்லை கதாபாத்திரத்திற்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம். மேலும், சோசியல் மீடியாவில் ‘முல்லை’ என்ற பெயரில் ஹாஸ்டேக்குகளை உருவாக்கி ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் எதற்காக இந்த பரிசு என்று கேட்டதற்கு அவர்கள் கூறியது, நீங்கள் மல்டி டாலேண்ட் அதாவது பல திறமைகளை கொண்டுள்ளீர்கள். அது மட்டும் இல்லாமல் முல்லை கதாபாத்திரம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு ஆகவே நாங்கள் சீரியலை காலை 6 மணிக்கு எழுந்தவுடன் பார்ப்போம். காலையில் கண் விழிப்பதே உங்கள் சீரியலில் தான். நாங்கள் அதை ஹாட் ஸ்டார் மூலமாக காலையிலே பார்த்து விடுவோம் என்று கூறினார்கள்.

Advertisement