சின்னத்திரையில் முதல் 5 இடத்தை பிடித்த கதாபாத்திரங்கள் – முல்லை, கண்ணம்மா, பார்வதிக்கு எந்த இடம் தெரியுமா ?

0
1597
serial
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-

அதே போல barcindia என்ற வலைதளத்தில் வாரம் தோறும் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகி வரும் டிவி நிகழ்ச்சிகளில் TRP ரேட்டிங் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதம் Trpயில் விஜய்டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியின் நம்ம வீட்டு பிள்ளை இரண்டாம் இடத்திலும், ரோஜா சீரியல் மூன்றாம் இடத்திலும், வானத்தை போல சீரியல் நான்காம் இடத்திலும் உள்ளது.

- Advertisement -

அதே போல விஜய்டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி மெகா சங்கமம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதே போல தற்போது தனியார் இணையம் நடத்திய சர்வே ரிப்போர்ட்டின் படி தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி சீரியல் நடிகைகளின் டாப் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா கதாபாத்திரம் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது

அதே போல இரண்டாவது இடம் பாண்டியன் ஸ்டோர் முல்லைக்கும், மூன்றாம் இடம் சன் டிவி ரோஜா கதாபாத்திரமும், நான்காம் இடம் பாக்கியலட்சுமி தொடர் பாக்கியலட்சுமி கதாபாத்திரமும் இறுதி இடத்தை செம்பருத்தி சீரியல் பார்வதி கதாபாத்திரமும் பிடித்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement