அதே ஜிமிக்கி, கழுத்தில் தாலி – பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் முல்லை கெட்டப்பில் வீடியோ வெளியிட்ட நடிகை. அப்போ காவ்யா போறாங்களோ ?

0
933
kavya
- Advertisement -

சமீப காலமாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. அதில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான குடும்பக் கதையை மையமாகக் கொண்டது. மேலும், இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும், இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் கதிர் – முல்லை கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி இருக்கிறது. ஆரம்பத்தில் இதில் முல்லையாக நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார். சித்ராவின் இழப்பு சின்னத்திரையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா இறந்து ஓராண்டு நிறைவடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

முல்லையாக வரும் காவ்யா:

மேலும், முல்லையாக வரும் காவ்யா பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்து இருந்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி உள்ளது. இந்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாட எல்லோரும் மீனாவின் வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் மீண்டும் முல்லை கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு இருந்தது. அதுவும் முல்லை கதாபாத்திரத்தில் அபிநயா என்பவர் நடிக்க இருப்பதாகவும் அதற்கான புகைப்படங்களும் வெளியாகி உள்ளது என்றும் கூறப்பட்டது.

மீண்டும் முல்லை கதாபாத்திரம் மாற்றமா:

இந்த நிலையில் இது குறித்து அபிநயா அவர்கள் இதற்கான விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் காவியாவிற்கு பதில் நான் தான் நடிக்கப் போகிறேன் என்று பலரும் சோசியல் மீடியாவில் வதந்தியை கிளப்பி இருக்கிறார்கள். நான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வில்லை. காவியா தான் நடிக்கிறார்கள். நான் முல்லை சித்ராவின் தீவிர ரசிகை. அதனால் அவரை போல் ஜிமிக்கி போடுவதும், உடை அணிவதும், ஹேர் ஸ்டைல் வைப்பதும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

-விளம்பரம்-

விளக்கம் கொடுத்த நடிகை:

அதனால் நான் முல்லையாக நடிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. அதோடு நான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அதனால் நான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது. பாண்டியன்ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் முல்லை ஆகிட முடியுமா? அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் மருமகள்கள் அனைத்தும் ஒரே ஹேர் ஸ்டைல், ஜிமிக்கி என்று தங்கள் சீரியலுக்கு என்று இருக்கும் வழக்கப்படி இருக்கிறார்கள். அதை தான் நானும் செய்து இருக்கிறேன்.

வைரலாகும் நடிகை பதிவிட்ட வீடியோ:

இதற்காக நான் முல்லை போல் உடையணிந்து கஷ்டப்படுத்துகிறேன், ஏமாற்றாதீர்கள் என்று நீங்கள் சோசியல் மீடியாவில் போடுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நான் யாரையும் கஷ்டப்படுத்த வில்லை, ஏமாற்றவில்லை. நீங்களாக ஒன்று புரிந்து கொண்டு அதை சோசியல் மீடியாவில் வதந்தியாக்கினால் அதற்கு நான் காரணமாக முடியாது. கடைசியாக சொல்கிறேன் நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஆனால், அது முல்லை கதாபாத்திரம் கிடையாது. என்னுடைய ரோல் மாடலே முல்லை. அதனால் முல்லை உடைய உடை, பாவனை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் முல்லை கதாபாத்திரம் மாறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement