பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவா இது ? இதுவரை இவரை மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கீங்களா.

0
2977
chitra
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசம் மற்றும் ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். தற்போது இந்த சீரியல் தான் விஜய் டிவியில் நம்பர் 1.

-விளம்பரம்-

அதோடு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இதில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் பல்வேறு நபர்கள் நடித்தாலும் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் வரும் குமரன் மற்றும் சித்ரா தான் ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஜோடிகளாக திகழ்ந்துவருகிறார்கள்.

- Advertisement -

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர்.நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார்.

தற்போது இவருக்கென்று தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.சித்ராவிற்கு எப்போது திருமணம் என்று அவரது ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர். நடிகை சித்ராவிற்கு திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கடந்த மாதம் 24 ஆம் தேதி நடிகை சித்ராவிற்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் சித்ரா.

-விளம்பரம்-

மேலும், திருமணத்திற்கு பின்னர் கூட இவர் தொடர்ந்து நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் நடிகை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதில் துளியும் மேக்கப் போடாமல் இருக்கிறார்.

Advertisement