விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நிகழ்ச்சியில் புதிய முல்லையாக நடித்து வரும் காவ்யா, முதன் முறையாக முல்லை லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, முல்லை கதாபாத்திரம் குறித்தும் சித்ரா குறித்தும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நான் நடித்து வரும் கதாபாத்திரத்தின் முதல் புகைப்படம் இது. விஜய் டிவியில் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் முல்லைக்கு இந்த அழகான கதாபாத்திரத்துக்கு தனித்துவமான ஒரு சில குணங்கள் இருக்கு.
அதற்கென தனியான ஒரு பாடி லாங்குவேஜ் இருக்கும். தமிழ் குடும்பத்தில் பிறந்து தமிழ் குடும்பத்திலேயே வளர்ந்து தமிழ் குடும்பத்தில் இருக்குற ஒருத்தரை கல்யாணம் பண்ணி முழுக்க முழுக்க தமிழ் தமிழ் கலாச்சாரத்தோடு இருக்கும் பெண். இதில் vj சித்ரா என்ற அழகான பெண்ணை நடிக்க வைத்தார்கள். தனிப்பட்ட முறையில் நான் சித்ராவை சந்தித்தது கிடையாது அவரிடம் பேசியதும் கிடையாது ஒரே ஒரு முறை ஒரு நிகழ்ச்சியின் போது அவரை தூரத்தில் பார்த்தேன். அந்த சமயம் நான் சேனலுக்கு புதியவர் எனவே அது அவர்தானா என்று தெரியவில்லை. அவருடன் நான் பேசவும் இல்லை.
ஆனால் பல பெண்களின் இன்ஸ்பிரேஷனாக அவருடைய வாழ்க்கையை அவர் உருவாக்கி இருக்கிறார் என்பதை நான் கேட்டேன். அவருடைய கதை எனக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்தது. சித்ராவின் கிளப்களை நான் பார்த்தது கிடையாது ஏனென்றால் நான் சீரியலை பார்த்தது இல்லை .ஆனால் இன்ஸ்டாகிராம் feedகளை பார்த்திருக்கிறேன் அவர் தன்னுடைய ரோலுக்காக 100% சரியாக கொடுத்திருந்தார்.எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் ஒரே போலத்தான் முடிகிறது ஆனால் அவர் எப்படி வாழ்ந்தார் எப்படி இறந்தார் என்பதில்தான் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு வேறுபடுகிறது. அவர் முல்லை என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.
இதை நாம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். முல்லையே சித்ரா தன்னைவிட்டு செல்வார் என்று நினைத்து இருக்க மாட்டாள். நம்மை விட்டு பிரிந்தாலும் நம் இதயத்தை விட்டு அவர் தெரியவில்லை. சித்ராவின் ரசிகர்கள் அனைவருக்கும் என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ரோலை நான் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை ஆனால் ஒரு நடிகையாக இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி எப்போதும் நான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு என்னுடைய பெஸ்ட் கொடுக்க வேண்டும் என்று தான் நினைப்பேன்.
அது பாரதிகண்ணம்மா அறிவு மணியாக இருந்தாலும் சரி முறையாக இருந்தாலும் சரி முல்லையில் ரசிகர்களை நான் ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் நடிப்புதான் என்னுடைய உயிர் தொழில் உலகம் காதல் எல்லாமே. என்னை ஜீரோவில் இருந்து இதுவரை ஆதரித்து வந்த அனைவருக்கும் நன்றி, இது ஒன்றும் முடிவு கிடையாது. எனக்கு நீங்கள் ஆதரவு தெறிவிக்க வேண்டும். முல்லைக்கும் புதிய முல்லைக்கும் எனக்கும் ஆதரவு தாருங்கள் என்று கூறியுள்ளார் காவ்யா.