விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியலாக திகழ்கிறது. இப்படி ஒரு நிலையில் இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் செல்வது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடரில் தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து வந்த காவ்யா விலகி இருக்கிறார்.
சித்ராவிற்கு பின் வந்த காவ்யா :
இந்த சீரியலில் கதிர்– முல்லை ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர்.ஆரம்பத்தில் இதில் முல்லையாக நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார். இப்போது தான் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா செட்டாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
என்ட்ரி கொடுத்த லாவண்யா :
நேற்றுடன் காவ்யா நடித்த காட்சிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது புதிய முல்லையாக லாவண்யா என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது அவருக்கு பதிலாக சிப்பிக்குள் முத்து லாவண்யா கமிட் ஆகி இருக்கிறார். சிப்பிக்குள் முத்து தொடரில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் லாவண்யா. இவர் திருப்பூரை சேர்ந்தவர். இவர் மாடலிங் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து சிற்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இப்படி ஒரு நிலையில் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
மீண்டும் பழைய முல்லையின் குரல் :
இப்படி ஒரு நிலையில் புதிய முல்லையாக என்ட்ரி கொடுத்து இருக்கும் லாவண்யாவிற்கு செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் சித்ரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது சித்ராவிற்கு டப்பிங் கொடுக்கப்பட்ட அதே குரல் தற்போது லாவண்யாவிற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய முல்லையாக காவ்யா வந்த போது சித்ராவிற்கு டப்பிங் கொடுத்த குரலுக்கு பதிலாக வேறு ஒருவர் தான் டப்பிங் கொடுத்து வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா நினைவாக இருந்த அந்தக் குரலும் தற்போது இல்லை என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து இருந்தனர்.
நிகிழ்ச்சியில் ஆழ்ந்த சித்ராவின் ரசிகர்கள் :
இப்படி ஒரு நிலையில் மீண்டும் சித்ராவிற்கு டப்பிங் கொடுத்த அதே குரலை புதிய முல்லைக்கு கொடுத்து இருப்பதால் சித்ராவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்து வந்தவர் டப்பிங் கலைஞரான காயத்ரி என்பவர்தான் இவர் முல்லை கதாபாத்திரத்திற்கு மட்டும் அல்லாமல் ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலியா மானசா சரவணன் மீனாட்சி முத்தழகு கதாபாத்திரம் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலில் பிரியா கதாபாத்திரம் என்று பல கதாபாத்திரங்களுக்கு டப்பிங் கொடுத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.