மீண்டும் கதிர் – முல்லைக்கு இடையே முத்த காட்சி – இந்த முறை முல்லை கொடுத்திருக்காங்க. (சித்ராக்கு பிரச்சனை வந்ததே இதனால தான்)

0
821
chitra

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் மற்ற ஜோடிகளை விட கதிர் – முல்லை ஜோடிகளுக்கு தான் ஏகப்பட்ட ரசிகர்கள். ஆனால், இந்த சித்ரா இறந்த பின்னர் இந்த ஜோடிகளுக்கு இடையிலாக ரோமன்ஸ் குறைந்து விட்டது.

என்னதான் புதிய முல்லையாக காவ்யா நடித்து வந்தாலும் சித்ராவை இன்னும் ரசிகர்கள் மிஸ் செய்து வருகின்றனர். அதே போல காவ்யா இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்த நாளில் இருந்தே கதிர் – முல்லை ஜோடிக்கு இடையே பெரிதாக ரொமான்ஸ் காட்சிகளும் இல்லாமல் இருந்தது. இப்படி ஒரு நிலையில்  இன்று ஒளிபரப்பாகவுள்ள காட்சியில் கதிருக்கு முல்லை முத்தம் கொடுத்துளளார்.அந்த காட்சியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் சித்ரா இருந்த போதும் இதே போல ரொமான்டிக் காட்சிகள் வைக்கப்பட்டது. மேலும், சித்ரா இறந்த பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசிய சித்ராவின் தயார், பாண்டியன் ஸ்டோர்ஸில் குமாரனுடன் நெருக்கமாக சித்ரா நடித்தது ஹேம்நாத்திற்கு பிடிக்கவில்லை இதனால் அவன் தொடர்ந்து சித்ராவை நச்சரித்து வந்ததாக கூறி இருந்தார் சித்ராவின் தாயார், மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை எழுதும் அந்த மேடம் இடமும் நான் போன் செய்து இது போல பிரச்சனை எல்லாம் இருக்கிறது நிச்சயதார்த்தம் வேறு முடிந்துவிட்டது.

எனவே கொஞ்சம் ரொமான்ஸ் காட்சிகளை தவிர்த்து விடுங்கள் என்று கூறினேன். ஆனால், அவர்களும் சரி அம்மா நான் பிறகு பேசுகிறேன் என்று போனை வைத்து விட்டார்கள். அதன் பின்னர் அவனிடம் எதையும் சொன்னேன் அவர்கள் கேட்கவில்லை என்று ஆனால் அவர் இறுதிவரை இதிலேயே தான் இருந்தார். இந்த விஷயத்தில்தான் அவர்கள் இருவருக்கும் சண்டை வந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement