பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு நடந்த நல்ல விஷயம் – ரசிகர்கள் செம்ம ஹாப்பி (ப்பா, எவ்ளோ நாள் காத்திருப்பு)

0
358
kumaran
- Advertisement -

பொதுவாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. அதில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாகக் கொண்டது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி வடிநம்மா எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Pandian Stores Kathir Fame Kumaran One Day Salary

மேலும், தமிழில் இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், இந்த சீரியலில் ஆரம்பத்தில் முல்லையாக நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார். சித்ராவின் இழப்பு சின்னத்திரையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் அப்பாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மீனாவின் அப்பாவுடைய மொத்த தொழிலையும் ஜீவா பார்த்துக் கொண்டு வருகிறார். இங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் வேலை செய்ய ஆளில்லை என்பதால் ஐஸ்வர்யா எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்கிறார். ஜீவாவை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு அனுப்பக்கூடாது என்று மீனா, மீனாவின் அப்பா, அம்மா மூவரும் சேர்ந்து திட்டம் போடுகிறார்கள். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Pandian Stores New Mullai Kavya About Kathir Romance

கதிர்-முல்லை பற்றிய தகவல்:

மேலும், இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் கதிர் – முல்லை கதாபாத்திரம் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று சொல்லலாம். கதிர் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் குமரன். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு முன்னர் சில சீரியல்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு மிகபெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இவரை ரசிகர்கள் அனைவரும் சின்னத்திரை தளபதி என்று செல்லமாக அழைக்கிறார்கள். ஆனால், குமரன் அதை விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

-விளம்பரம்-

குமரனின் சின்னத்திரை பயணம்:

மேலும், சீரியலில் குமரனின் நடிப்பும், சாந்தமான குணமும் பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது. இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். இவர் பல நிகழ்ச்சிகளில் பணியாற்றி உள்ளார். அதே போன்று பல தொடர்களிலும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் குமரன் குறித்து ஒரு ஸ்பெசலான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், தற்போது குமரன் அவர்கள் சீரியல்களில் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்ஸிலும் நடிக்க இருக்கிறார். கூடிய விரைவில் அவரை ரசிகர்கள் வெப் தொடரில் பார்க்கப் போகிறார்கள். குமரனின் நடிப்புத் திறமைக்கும், நடன திறமைக்கும் ஏற்ற வகையில் ஒரு கதை அமைந்துள்ளது. அதில் தான் குமரன் நடிக்க இருக்கிறார்.

குமரன்-சைத்ரா ரெட்டி நடிக்கும் வெப் சீரிஸ்:

இதற்கான பூஜைகள் நேற்று நடைபெற்றிருந்தது. தற்போது அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் குமரன் ரசிகர்கள் கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு மட்டுமில்லாமல் லைக்ஸ்குகளைக் குவித்து ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். மேலும், இந்த சீரிஸில் குமரன் மட்டுமில்லாமல் பல சின்னத்திரை பிரபலங்கள் நடிக்கின்றனர். திருமதி ஹிட்லர் புகழ் அமித், கயல் சீரியல் சைத்ரா ரெட்டி என பல சின்னத்திரை பிரபலங்கள் இந்த சீரிஸில் இணைகின்றனர். ‘புல்லட் புரபோசல்’ என்பது இந்த வெப்சீரிஸ்ஸின் பெயர். இதில் குமரனுக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதற்கான தகவல் உறுதி செய்யப்படவில்லை.

Advertisement