எந்த ஊர் பேங்க்ல இப்படி எல்லாம் பண்றாங்க – பாண்டியன் ஸ்டோர்ஸ் லாஜிக்கை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
1727
pandianstores
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா, மூர்த்தியிடம் சண்டையிட்டு தன்னுடைய மாமனாரின் வீட்டிற்கு சென்று விடுகிறார்.

- Advertisement -

பிறகு ஐஸ்வர்யா, கண்ணனும் மூர்த்தியிடம் சண்டை போட்டு விட்டு வெளியே வந்து விடுகிறார்கள். கதிர், மூர்த்தி மட்டும் ஒன்றாக இருக்கிறார்கள். கண்ணன், ஜீவாவை அழைத்து வர தனமும், கதிரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவருமே வர முடியாது என்று சொல்லிவிடுகிறார்கள். தற்போது சீரியலில் கண்ணன் கிரிடிட் கார்டு வாங்கி செலவு செய்து விட்டு பணம் கட்ட முடியாமல் திணறுகிறார். இருந்தும் ஐஸ்வர்யா வளைகாப்பை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று கடன் வாங்குகிறார்.

இந்த நிலையில் பணத்தை திருப்பி கட்ட சொல்லி பேங்கில் இருந்து கண்ணன் வீட்டுக்கு வருகிறார்கள். பின் இருவருக்கும் வாக்குவாதம் ஆகி கண்ணனை அடித்து விடுகிறார்கள். அப்போது கண்ணன் வீட்டிற்கு வந்த கதிர் பேங்க் அதிகாரர்களிடம் கேட்க போய் கதிர் அவர்களை அடித்து விடுகிறார். பின் அவர்கள் போலீசில் புகார் அளிக்கிறார்கள். இதனால் கதிர் கைது செய்யப்படுகிறார். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா- கண்ணன் வளைகாப்பிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் குறித்த தகவல்:

எல்லோரும் வளைகாப்பிற்கு செல்ல நினைக்கும் போது மூர்த்தி வந்து கண்ணனை அடித்து நடந்ததை கூறுகிறார். இதனால் மணமுடைந்த கண்ணன் அழுது கொண்டிருக்கிறார். இனி கதிர் வெளியே வருவாரா ?ஐஸ்வர்யா வளைகாப்பு நடைபெறுமா? இனிமேலாவது ஐஸ்வர்யா திருந்துவாரா? போன்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீரியலை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, சீரியலில் கண்ணனை பேங்க் ஆபிஸர்கள் அடிக்கிறார்கள்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இதை பார்த்து தான் நெட்டிசன்கள், கண்ணன் அரசு வங்கியில் வேலை செய்கிறார். அவருக்கு கிரெடிட் கார்டு விதிமுறைகள் பற்றி தெரியாதா? எதுவுமே தெரியாமல் தான் அவர் கார்டை பயன்படுத்தி விட்டாரா என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சீரியலின் இயக்குனர் எந்த லாஜிக்கும் பார்க்க மாட்டாரா? ஒரு அரசு வேலையில் செய்பவருக்கு வங்கி விதிமுறைகள் கூடவா தெரியாது என்றெல்லாம் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Advertisement