விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று இருந்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இன்றோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நிறைவடைய இருக்கிறது. 5 ஆண்டுகள் ஓடிய இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவோடு 1348 எபிசோடுகளை கடந்து இருகிறது.
இன்று 28 அக்டோபர் 2023 பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. இன்று குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததோடு தொடரை முடித்துள்ளனர். சீரியல் நடிகர்கள் அனைவருக்கும் இருக்க சுபம் என தொடரை முடித்துவிட்டனர். என்னதான் இந்த தொடர் அவ்வப்போது கேலிக்கு உள்ளானாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சீரியல் என்ற பெருமை இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 துவங்க இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது தான் இரண்டாவது பாகத்தின் டைட்டில். இதற்கு முன்பு அண்ணன் தம்பிகள் கதையை மையமாக வைத்து எடுத்திருந்தார்கள். தற்போது இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து கதையை எடுக்கிறார்கள். மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது இந்த இரண்டாவது சீசன் உடைய ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இந்த மாத இறுதியிலேயே இந்த இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது சீசனில் ஸ்டாலினை தவிர மற்ற எந்த நடிகர்களும் இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பாண்டியன் குடும்பத்தில் இருந்தவர்களில் வெங்கட் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசி தம்பியாக வரும் சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். ஹேமாவும், அவரது அப்பாவாக நடித்த ரவியும் இரண்டாவது சீசனில் இருக்கிறார்கள். ஸ்டாலின் மனைவியாக நடித்த சுஜிதா, கதிர் இவர்கள் இருவரும் இரண்டாவது சீசனுக்கு நடிக்க மறுத்து விட்டார்கள்.