கார்பரேஷனா, income tax அபிசரா ? சுதப்பிய பாண்டியன் ஸ்டோர்ஸ். கலாய்க்கும் ரசிகர்கள்.

0
526
pandianstores
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோவில் சொதப்பி இருக்கும் சீனை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியலில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஒன்று. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதோடு கடந்த சில மாதங்களாகவே சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் மூர்த்தி குடும்பத்துக்கும் மீனாவின் அப்பா ஜனார்தனுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதனால் ஜனார்தன் மூர்த்தி குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

மனமுடைந்து மூர்த்தியின் மொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியே வருகிறது. பின் கதிர் தன்னுடைய வீட்டிற்கு மொத்த குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு செல்கிறார். வீட்டை கட்டும் வரை கதிர் வீட்டில் இருக்க முடிவு எடுக்கிறார்கள். மூர்த்தியின் குடும்பம் தாங்கள் புதிதாக வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கான வேலையை ஆரம்பிக்கிறார்கள். மேலும், மூர்த்தியின் குடும்பத்தை பழிவாங்க ஜனார்த்தன் திட்டம் போடுகிறார்.

சீரியலின் கதை:

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோவை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நேற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில், ஜனார்த்தன் மூர்த்தி குடும்பத்தை பழிவாங்க சூப்பர் மார்க்கெட்டில் பிரச்சனை கொண்டு வர முடிவு செய்கிறார். இதனால் சூப்பர் மார்க்கெட் விவசாய நிலத்தில் இருப்பதாகவும், இங்கு கமர்சியல் பில்டிங்க் கட்டக்கூடாது என்றும் கடையை உடனே காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

-விளம்பரம்-

சீரியல் ப்ரோமோ:

இதனால் மூர்த்தி, ஜீவா, கதிர் மூவருமே பொருள்களை லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர். இதை ஜனார்த்தன் பார்த்து சிரிக்கிறார். உடனே ஜீவாவும், கதிரும் ஜனார்த்தன் காரை மடக்கி நிறுத்தி, எங்கள் கடையை மூடலாம். எங்களை வீட்டை விட்டு வெளியேற்றலாம். ஆனால், எங்கள் நாலு பேரையும் யாராலும் பிரிக்க முடியாது. எங்களை மட்டும் இல்லை எங்க வீட்டுக்கு வந்த உங்க பொண்ணு மீனாவையும் பிரிக்க முடியாது என்று கூறியிருந்தார்கள்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்:

இப்படி இவர்கள் பேசி இருந்த ப்ரோமோ வெளியாகிறது. ஆனால், அதில் ஆபீஸர்ஸ் வந்து பேசும்போது நாங்கள் கார்ப்பரேஷனில் இருந்து வருகிறோம் என்று கூறாமல் இன்கம் டேக்ஸ் ஆபீசிலிருந்து வருகிறோம் என்று பேசி இருக்கின்றனர். அந்த வீடியோ கிளிப்ஸ்ஸை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பரப்பி மண்ட மேலிருக்கும் கொண்டையை மறந்துட்டீங்களே! இன்கம் டேக்ஸ் ஆபிஸுக்கும், கார்ப்பரேஷன் ஆபீஸுக்கும் வித்தியாசம் தெரியலையா? என்றெல்லாம் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement