பாண்டியன் ஸ்டோர்ஸ் புது வீட்டிற்கும் சிம்புவிற்கும் இருக்கும் கனக்ஷன் – ரகசியம் சொன்ன ஹேமா.

0
2421
pandianStores
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புது வீடு குறித்த தகவல் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சீரியலில் தனம், முல்லை, ஐஸ்வர்யா ஆகிய மூவருக்கும் நல்லபடியாக குழந்தை பிறந்து விடுகிறது. இன்னொரு பக்கம் தனத்திற்கு மார்பக புற்றுநோய் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து வருகிறது.பின் தனத்திற்கு இருக்கும் பிரச்சினை வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்த உடன் பலரும் வேதனைப்படுகிறார்கள். இருந்தாலும், மொத்த குடும்பமே தனத்திற்கு உறுதுணையாக நிற்கிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

அது மட்டும் இல்லாமல் அனைவரும் எதிர்பார்த்த படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் புதிய வீட்டின் புகு மனை விழாவும் சமீபத்தில் தான் நடந்தது. எல்லோருமே தங்களுடைய அழகான பெரிய வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். தற்போது சீரியல் நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காண்பிக்கும் புது வீடு குறித்து தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதன் முதலில் செட்டிநாடு வீட்டை தான் காண்பித்து இருந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வீடுகள்:

அது பாரம்பரிய மிக்க வீடு. பெரிய தூண்கள், திண்ணையுடன் கூடிய வாசல், வீட்டுக்கு நடுவில் முற்றம், வெளியில் தோட்டம் என்று இயற்கை சூழலில் அழகாக கிராமத்து பானியில் இருந்தது. அதற்கு பின் இரண்டாவது கதிர் இருக்கும் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். பின் இடத்தை வாங்கி வீடு கட்டுவது போல் கதையை கொண்டு சென்றிருந்தார்கள். தற்போது புதிய வீட்டிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பமே கிரகப்பிரவேசம் செய்து சென்றிருக்கின்றது.

-விளம்பரம்-

ஹேமா பதிவிட்ட வீடியோ:

இந்த வீடு இசிஆரில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த புது வீட்டினை குறித்து தான் ஹேமா தன்னுடைய youtube சேனலில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், நான் இன்று உங்கள் எல்லோரையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டுக்கு தான் கூட்டிட்டு போகிறேன். இது நம்முடைய மூணாவது வீடு. சீரியல் ஆரம்பிக்கும் போது செட்டிநாடு வீடு இருந்தது. அதற்கு பிறகு வேறு வீடு, இப்போது புது வீட்டுக்கு வந்திருக்கோம்.

புது வீடு குறித்த வீடு:

இந்த வீடு இசிஆரில் இருக்கிறது. இதுக்கு ரொம்ப தூரம் வரணும். தினமும் ஏதோ ஒரு ஊருக்கு போயிட்டு வர மாதிரி இருக்கு. மேலும், இந்த வீடு சிம்பு அம்மாவோட தங்கச்சி வீடு. இதை அவங்கள் சூட்டிங்காகத்தான் பயன்படுத்துகிறார்கள். வெளியில் ஒருவர் சிம்பு அம்மா மாதிரி இருந்தார்கள். எனக்கு சரியாக தெரியவில்லை. இங்கதான் இருக்க போறோம் போக போக பாத்துக்கலாம் என்று பல விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement