ஐ எம் பேக் – ரசிகர்களுக்கு குட் நியூசுடன் வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.

0
3687
chitra
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் சின்ன திரை முதல் வெள்ளி திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் இரண்டு மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் புதிய எபிசோடுகள் குறித்து தற்போது விஜய் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொலைக்காட்சியில் சீரியல்களின் பழைய எபிசோடுகளையே ஒளிபரப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், தொலைக்காட்சி நிறுவனங்கள் சமீபத்தில் தான் தமிழக அரசிடம் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி வாங்கினர். தமிழக அரசும் சில நிபந்தனைகளுடன் தான் சீரியல் படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளித்தது. தற்போது சீரியல் எடுப்பதற்கான பணிகள் எல்லாம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சி இந்த வாரம் முதல் சீரியல்களின் புதிய எபிசோட்கள் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

- Advertisement -

இது குறித்து விஜய் நிறுவனம் கொடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பது, அடுத்த வாரம் முதல் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘காற்றின் மொழி’, ‘ஆயுத எழுத்து’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘தேன்மொழி’ ஆகிய தொடர்கள் வழக்கம்போல் புதிய எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகும். நேயர்கள் தவறாமல் கண்டு மகிழலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் ரசிகர்களின் அபிமானமான தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லை ஷூட்டிங்கில் கலந்து கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே இந்த வாரம் ‘செந்தூரபூவே’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகர் ரஞ்சித் முதன் முறையாக சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement