விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஒன்று. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதை மையமாக கொண்ட கதை ஆகும். தற்போது இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் 300 அத்தியாயங்களை வெற்றிகரமாக கடந்து உள்ளது. இதை கொண்டாடும் விதமாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 300வது நாள் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை பிரம்மாண்ட அளவில் கொண்டாடி உள்ளார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர். இந்த நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள் ரசிகர்களும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும்.
அதோடு சமீபத்தில் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் 500வது நாள் கொண்டாட்டம் நடந்து முடிந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர் இன் மொத்த குடும்பமும் கலந்து கொண்டு உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியமான பல போட்டிகளும், உணர்ச்சிப்பூர்வமான நிறைய விஷயங்கள் நடந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் திருநெல்வேலியில் இருந்து 40 பேருக்கும் மேற்பட்ட ஒரு கூட்டுக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாண்டியன் ஸ்டோர் விழாவில் கலந்து கொண்டு உள்ளார்கள். இவர்கள் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு தலைப்பாகை கட்டி சீர் வரிசையோடு விழாவை சிறப்பித்து உள்ளார்கள். இது மிகப் பெரிய விஷயம் ஆகும்.
ஏன்னா, அந்த அளவிற்கு இந்த சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு (நாளை) மதியம் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள். இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியின் மீது பல எதிர்பார்ப்புகளுடன் உள்ளார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து ஸ்டாலின் என்கிற மூத்த அண்ணன் மூர்த்தியிடம் கேட்ட போது அவர் கூறியது, நான் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து வந்து உள்ளேன். ஒரு அழகான கூட்டுக் குடும்பம் கதையில் நடிப்பது இதுவே எனக்கு முதல் முறை ஆகும். அதோடு அண்ணன் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.
இன்றைய காலகட்டத்தில் அம்மா, அப்பா பிள்ளைகள் ஒன்றாக இருந்தாலே பெரிய விஷயம். ஆகையால் அண்ணன், தம்பி, அக்கா, அண்ணி என கூட்டு வாழ்க்கை முறை எவ்வளவு வலுவானது என்பதை எல்லோருக்கும்புரிய வைக்கும் விதமாக தான் நாங்கள் இந்த கதையை கொண்டு வந்தோம். இது போன்ற சீரியலில் மூத்தவனாக நடிப்பது மிகுந்த மன நிறைவை எனக்கு தெரிகிறது. அது மட்டுமல்லாமல் எங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அந்த அளவிற்கு நெகட்டிவ் கதாபாத்திரம் இல்லாமல் இருக்கும் ஒரு சீரியல். அது தான் எங்களுக்கு பலம். அதனால் தான் மக்களின் கவனத்தையும் எங்கள் பக்கம் இழுத்தது. திட்டம் தீட்டுவது, பழி வாங்குவது,சதி செய்வது போன்ற எந்த ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம் இல்லாமல் இருப்பது எங்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்து உள்ளது.
மேலும், இந்த சீரியல் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். எப்போதும் பிற மொழி தொடர்களை தமிழில் கொண்டு வருவது வழக்கமான ஒன்று. ஆனால், 300 அத்தியாயங்களுக்கு மேல் வெற்றி கொண்ட ஒரு தமிழ் தொடர் அதாவது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இதுவே எங்களுடைய வெற்றி தான். மேலும், எங்களுடைய முழு முயற்சியையும் கொடுப்போம். மென்மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வெற்றி பெறுவதற்கு மனமார கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.