பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி வீட்டில் நடந்த துக்க சம்பவம் – அவரே வெளியிட்ட இரங்கல் பதிவு.

0
584
- Advertisement -

சமீப காலமாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. அதில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும், இந்த சீரியலில் ஆரம்பத்தில் முல்லையாக நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார். சித்ராவின் இழப்பு சின்னத்திரையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி குடும்பத்தினர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் கடையை கட்டி இருக்கிறார்கள். ஆனால், அந்த கடையை திறக்க கூடாது என்று போலீசார் சீல் வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

பின் இதைக் கேட்டு கதிர், மூர்த்தி, ஜீவா மூவரும் அதிகாரியை சந்திக்கிறார்கள். அவர்கள் முன் பகையை மனதில் வைத்து கொண்டு கடையை இடித்து தள்ள போகிறோம் என்று மிரட்டுகிறார்கள். இதைக் கேட்டு உடைந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தாசில்தார் அலுவலகத்திற்கு முன் உட்கார்ந்து போராட்டம் செய்கிறார்கள். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் முத்து வீட்டில் நடந்த துயர சம்பவம் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஸ்டாலின் முத்து திரைப்பயணம்:

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்டாலின் முத்து. இவர் 12 ஆண்டுகளுக்கு மேல் நடிப்பு துறையில் இருக்கிறார். இவர் தேனி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர். பிரபல தமிழ் இயக்குனர் பாரதிராஜாவின் அண்ணன் மகன் தான் ஸ்டாலின் என்பது குறிபிடத்தக்கது. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே ஸ்டாலின் நடிப்பின் மீது அதிக ஆர்வம் உடையவர். மேலும், தன்னுடைய சித்தப்பா தமிழ் நாடே போற்றும் இயக்குனராக இருந்தாலும் முழுக்க முழுக்க தன்னுடைய நடிப்புத் திறமையால் முன்னுக்கு வந்தவர் ஸ்டாலின்.

-விளம்பரம்-

ஸ்டாலின் முத்து நடித்த சீரியல்கள்:

பாரதிராஜா இயக்கிய தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் முத்து. அதனை தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். ஆண்டாள் அழகர், கனா காணும் காலங்கள் என்று பல தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையிலும் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மூர்த்தியாகவே எல்லோர் வீட்டிலும் வாழ்கிறார். இந்த சீரியலின் ஸ்டாலின் முத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது.

ஸ்டாலின் முத்து பதிவிட்ட பதிவு:

இந்த நிலையில் தற்போது ஸ்டாலின் முத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சோகமான செய்தி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அது என்னவென்றால், அவருடைய வீட்டில் நடந்த துக்க சம்பவத்தையும், போஸ்டரையும் பகிர்ந்திருக்கிறார். ஸ்டாலின் முத்து உடைய பெரியம்மா ராஜம்மாள் தான் நேற்று காலம் ஆகி இருக்கிறார். அவருக்கு இன்று நல்லடக்கம் செய்திருக்கிறார்கள். இதை தான் ஸ்டாலின் முத்து அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement