அட, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்தாளாரா ? அதுவும் ஆண் குழந்தையாக.

0
1251
sujitha
- Advertisement -

தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோஸ் சீரியலில் தனம் என்ற கதாபத்திரத்தில் நடிகை சுஜித்தா நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சுஜித்தா அவர்கள் சீரியலுக்குபுதிது கிடையாது, தமிழ் மக்களுக்கும் புதிது கிடையாது. ஏன்னா நடிகை சுஜித்தாவைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர் சினிமா படங்களிலும் சீரியல்களிலும் நடித்து உள்ளார். மேலும், நம்ம நடிகை சுஜித்தா யாரு? அதோடு சுஜித்தா குடும்பத்தைப் பற்றியும், அவர் தற்போது என்ன செய்திருக்கிறார் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

-விளம்பரம்-
Mundhanai-Mudichu

சுஜித்தாவின் அப்பா பெயர் டி.எஸ். மணி மற்றும் அம்மா பெயர் ராதா ஆகும். மேலும்,நடிகை சுஜித்தா அவர்கள் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் என்னும் ஊரில் ஜூலை மாதம் 12 ஆம் தேதி 1983 இல் பிறந்தார். அதோடு இவருக்கு ஒரு தங்கையும், ஒரு அண்ணனும் உள்ளார்கள். அவர் அண்ணனுடைய பெயர் சூரிய கிரன். இவர் சினிமா திரைப்பட இயக்குனர் ஆவார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், சூரிய கிரன் சமீபத்தில் தெலுங்கு பிக் பாஸில் கூட கலந்து கொண்டார்.

- Advertisement -

ஜித்தா அவர்கள் பிறந்து, வளர்ந்தது எல்லாம் கேரளாவில் தான். இருந்தாலும் இவர் தற்போது சென்னையில் தான் வசித்து வருகிறார். இவர் முதன் முதலாக சினிமாத் துறையில் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார். அதுவும் 41 நாள் குழந்தையாக இருக்கும் போது. சுஜிதா, தமிழ் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பூவிழி வாசலிலே படத்தில் நடித்த குழந்தை இந்த நடிகையா ? புகைப்படம் உள்ளே -  Tamil Behind Talkies

அதே போல இவர் தெலுங்கில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதே போல சத்யராஜ் நடிப்பில் வெளியான பூவிழி வாசலிலேயே படத்திலும் நடிகை சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் முந்தானை முடுச்சு, பூவிழி வாசலிலே இரண்டு படத்திலும் நடிகை சுஜிதா ஆண் குழந்தையாக தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement