பல லட்சம் குடுத்து சித்ரா ஆசை ஆசையாக வாங்கிய கார் இப்போ எங்க இருக்கு பாருங்க. (இதான் வாழ்க்கை)

0
203915
- Advertisement -

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

-விளம்பரம்-

மரணத்திற்கு காரணம் அவரது தாயார் மற்றும் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர். சித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் நடைபெற்ற விசாரணையில் அவர் தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணை இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இதையும் பாருங்க : நான் முதன் முறையாக புடவை கட்டிய போது – 16 வயதில் வகுப்பறையில் தோழிகளுடன் ஸ்ரேயா கொடுத்துள்ள போஸ்

- Advertisement -

சித்ரா இறந்த பின்னர் அவரது குடும்பத்தினர் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். அதே போல சித்ரா ஆசை ஆசையாக வாங்கிய காரை கூட யாரும் எடுப்பது இல்லையாம். சித்ரா இருந்த போது பல லட்ச ருபாய் மதிப்புள்ள ஆடி கார் ஒன்றை ஆசை ஆசையாக வாங்கி இருந்தார். சித்ரா இறந்த போது தங்கி இருந்த ஹோட்டலுக்கு கூட இந்த காரில் தான் சென்று இருந்தார்.

Tamil TV Actress VJ Chithra Photoshoot Images | New Movie Posters

அதே போல இந்த காரை சித்ராவிற்கு ஒரு அரசியல் பிரபலம் தான் வாங்கி கொடுத்தார் என்று கூட சர்ச்சைகள் எழுந்தது. ஆனால், அந்த காரை சித்ரா தனது சொந்த காசில் தான் வாங்கினார் என்று அவரது குடும்பத்தினர் கூறி இருந்தனர். ஆனால், சித்ரா இறந்த பின்னர் இந்த காரை யாரும் பயன்படுத்துவது இல்லையாம். இருப்பினும் அந்த காரை அடிக்கடி சுத்தம் செய்து வைத்து சித்ராவின் நினைவாக பார்த்துகொண்ட வருகின்றனராம் அவரது குடும்பத்தினர்.

-விளம்பரம்-
Advertisement