அவன் நல்லவனே கிடையாது, அவனுக்கு ஏகப்பட்ட பொண்ணுங்கள தெரியும் – சித்ராவின் கணவர் குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன நடிகை.

0
3844
chitra
- Advertisement -

நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளா சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சித்ரா ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படபிடிப்பு முடித்துவிட்டு இன்று அதிகாலை (டிசம்பர் 8) 2.30 ,மணி அளவில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நடிகை சித்ராவுடன் தங்கி இருந்த வருங்கால கணவர் ஹேமந்த் தான் சித்ரா இறந்த போது உடன் இருந்துள்ளார். இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
chitra

நடிகை சித்ராவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த அக்டோபர் 19-ம் தேதி இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதும் விசாரணயில் தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் திருமணம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருந்ததாகவும் சித்ராவின் பெற்றோர்கள் இப்படி ஒரு நிலையில் சித்ரா திருமணம் செய்து கொண்ட நபர் நல்லவன் இல்லை என்றும் அவன் பண்ணிய டார்ச்சரில் தான் சித்ரா இந்த முடிவை எடுத்திருப்பார் என்றும் நடிகையும் சித்ராவின் நெருங்கிய தோழியான ரேகா நாயர் கூறியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர், கிட்டத்தட்ட இரண்டரை வருடத்திற்கு மேலாக இவர்களுக்குள் ஒரு உறவு இருந்திருக்கிறது பின்னர் அது காதலாக மாறி இருந்தது. சித்ராவின் நிச்சயதார்த்தம் முடிந்த புகைப்படத்தை பார்த்ததுமே என்னுடைய நண்பர்கள் வட்டாரத்திலும், சித்ராவிடமும் நான் சொன்னது சித்ரா தேர்ந்தெடுத்தது மிகவும் தப்பான நபர் என்று கூறினேன் ஆனால்அவள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டாள். அவனை எனக்கு ஏற்கனவே தெரியும். அவன் நல்ல பையன் கிடையாது. சித்ரா இனி எழுந்து வந்து எதையும் சொல்ல போவது கிடையாது ஆனால் அவனுக்கு இது தொழில் சென்னையில் உள்ள பெண்களுக்கு அவனைத் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

அவன் எல்லா கிளப்பியிருக்கும் பப்ர்க்கும் வருவான். எல்லா இடத்திலும் எல்லா பெண்களையும் அவனுக்கு தெரியும். சித்ராவிற்கு நன்றாக தெரியும் இவன் நல்ல பையன் கிடையாது என்று. ஆனால், அப்படி இருந்தும் ஏன் அவனை கல்யாணம் பண்ணி இதெல்லாம் நடந்தது என்று தெரியவில்லை. கடந்த மூன்று மாதங்களாக நான் அவளை சந்தித்த போது எப்போதும் அவள் டென்ஷனாக தான் இருப்பாள் எங்கே இருக்கிறாய் ? யார் கூட இருக்கிறாய் ? என்று அடிக்கடி பரபரப்பாகவே இருந்தால். அப்போதும் நாங்கள் சொன்ன நீ நன்றாக யோசி என்று. ஆனால், அவர் கேட்கவில்லை. இது எனக்கு தற்கொலையாக தெரியவில்லை. தற்கொலை செய்யும் அளவிற்கு நடைபெற்ற ஒரு கொலை என்பது போலத்தான் தெரிகிறது. அனைத்திற்கும் அவன் வாய் திறந்தால் தான் உண்மை தெரியும்.

-விளம்பரம்-
Advertisement