‘ஷீட் வீடா இருந்தாலும் சொந்த உழைப்பில் கட்னது’ – தன் பெற்றோருக்கு வீடு கட்டி கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னாள் நடிகை.

0
473
deepika
- Advertisement -


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது. இந்த சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தீபிகா. இவர் தொகுப்பாளினியாக தன் கேரியரை தொடங்கினார். பின் சந்திரகுமாரி, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடர்களில் நடித்து உள்ளார். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்து என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். பின் தீபிகா சீரியலில் இருந்து விலகினார்.

-விளம்பரம்-

தற்போது இந்த சீரியலில் ஐசு கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்து வருகிறார். தீபிகா சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இது குறித்து தீபிகாவும் விளக்கம் கொடுத்திருந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் நடிகை தீபிகாவிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் கூறி இருப்பது, என் அம்மாவும் அப்பாவும் தான் என்னுடைய பலமே. இதுவரைக்கும் அவர்களுடைய கஷ்டத்தை என்னிடம் சொல்லியதே கிடையாது. நானும் அவர்களிடம் என் கஷ்டத்தை சொல்லியது கிடையாது.

- Advertisement -

சீரியல் வாய்ப்பு :

இரண்டு பேருமே தூரமாக இருப்பதால் முடிந்த அளவுக்கு சோகத்தை வெளிக்காட்டாமல் சந்தோஷத்தை பரிமாறிக் கொள்கிறோம். இப்பவும் நான் என்னுடைய யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் என சோஷியல் மீடியாவில் கவனம் செலுத்திக் கொண்டு தான் இருக்கிறேன். இரண்டு சேனல்களில் இருந்து வாய்ப்பு வந்தது.நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ஓகே தான் இருந்தாலும் அந்த கதைக்களம் எனக்கு செட் ஆகும்னு தோணவில்லை. அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

சிறிய வீட்டை கட்டிய தீபிகா :

எனக்கு பெரிய அளவில் கான்டக்ட் இல்லாததால் கதாநாயகிக்கான தேர்வு நடக்கிறது தெரிவது இல்லை. அப்படி தெரியும் நேரத்தில் நான் போகவும் தயாராகத்தான் இருக்கிறேன். தற்போது தீபிகா தனது யூடுயூபில் தான் அதிகம் வீடியோக்களை போட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் தனது சொந்த சம்பாத்தியத்தில் தனது பெற்றோர்களுக்காக ஒரு சிறிய ஷீட் வீட்டை கட்டி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம் :

அதில் ‘ சின்ன வயசுல டீச்சர், பெரிய பசங்களா ஆனதும் அப்பா அம்மாக்கு என்ன செய்வீங்கனு கேட்டா நெறய பேரு வீடு கட்டி கொடுப்போம்னு சொல்லுவோம். ஆமா, எல்லா பசங்களுக்கும் அப்பா அம்மாக்கு சொந்தமா வீடு கட்டி தரணும்னு கண்டிப்பா ஆச இருக்கும். வீடு ஒரு சின்ன விஷயம் இல்ல அதுல 1000 காணகான எமோஷன் இருக்கு. இன்னைக்கு எங்க அம்மா அப்பாக்கு என்னால முடிஞ்ச ஒரு கிப்ட் கொடுத்திருக்கேன். பாக்குற உங்களுக்கு இது சின்னதா தெரியலாம்.

எங்களுக்கு இது கனவு

ஆனா, அதுல வாழ போற எங்களுக்கு இது கனவு. நிம்மதியா தூங்க ஒரு இடம் வேணும்னு நெனச்சவங்களுக்கு இந்த குட்டி வீடு கண்டிப்பா சந்தோசம் தரும்னு நம்புறேன் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். தீபிகாவின் இந்த பதிவை கண்ட பலரும் அவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அடுத்த இதைவிட ஒரு பெரிய வீடு கண்டிப்பாக காட்டுவீர்கள் என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்ததும் வருகின்றனர். விரைவில் அது நடக்கும் என்று வாழ்த்துவோம்.

Advertisement